சனி, 10 ஏப்ரல், 2010

மீண்டும் ‘இடி அமின்’ சிறிலங்காவில் ஆட்சிபீடம் ஏறுகிறார்





நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போதைய சிறிலங்கா அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ”எந்தவழியை” பயன்படுத்தியேனும் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் உண்டு. குறிப்பிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாங்கப்படுவார்கள் என்று கூட அமெரிக்கா உயரதிகாரி ஒருவர் அண்மையில் கருத்துவெளியிட்டிருந்தார். இவ்வாறான பின்னனியில் சிறிலங்கா அரசியலின் உள் நிலமைகள்பற்றி ஆராய்கிறார் நாலக குமாரசிங்க.

‘சிறிலங்காவில் விருப்பு வாக்கு முறைமை மூலம் இறுதியாக இடம்பெறுகின்ற இறுதித் தேர்தல் இதுவாகவே இருக்கும்’, என போக்குவரவுத் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அண்மையில் மகாவலி நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது நாடாளுமன்றத் தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னரே அதன் முடிவை அரசாங்கம் அறிந்துள்ளது என்பதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அரசாங்கம் ஏப்ரல் 8 ஆம் திகதி அன்று நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்குத் தீர்மானித்திருக்காவிட்டால், தற்போதுள்ள விருப்பு வாக்கு முறைமையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதென்பது அதற்கு சாத்தியமற்றதென அவர்கள் கூறுகின்றனர். அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்கு அத்தகைய பெரும்பான்மை அவசியமாகும்.

மகிந்த ராஜபக்ச பதவி ஆசையால் பீடிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அரசதலைவர் தேர்தலில் வெற்றிகொண்ட பின்னர், அரசாங்கத்தில் ராஜபக்ச குடும்பத்தின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களே பிரதமர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சிறிலங்கா அரசதலைவர் தனது மகன் நாமல் ராஜபக்சவை குடும்ப வாரிசாக அரசியலில் அறிமுகம் செய்துள்ளார். நிறைவேற்று அதிகாரமுள்ள அரசதலைவர் முறைமையையும் விருப்பு வாக்கு முறைமையையும் நீக்குவதற்கேற்ற முறையில் அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்கே அரசாங்கம் தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விரும்புகிறது. ஆளுங் கட்சியின் எல்லா பிசாசுகளும் நிறைவேற்று அதிகாரமுடைய அரச தலைவர் ஊடாகவே வருவதாக வாக்காளர்கள் நம்பவைக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவிலுள்ள மக்கள் ஏற்கனவே ராஜபக்சவை ‘இடி அமின்’ என்றும் ‘சர்வாதிகாரி’ என்றும் அழைக்கத் தொடங்கிவிட்டனர். அநேகமாக சர்வாதிகார ஆட்சியின் கொடூரத்தை அவர்கள் உணர்ந்திருக்கக்கூடும். ஆனால் அது இன்னமும் முழுமையாக வெளிக்காட்டப்படவில்லை

கொழும்பு, வாட் பிளேசில் அமைந்துள்ள பிரத்தியேக வாசஸ்தலத்திற்கு முகவரியிட்டு, 1983 இல் சிறிலங்கா அரசதலைவர் ஜெ.ஆர் ஜெயவர்த்தனவுக்கு நான் எழுதிய அநாமதேயக் கடிதத்தில் அவரை இடி அமின்’ என்று குறிப்பிட்டிருந்தேன். உண்மையில் அவர் தேசியம் என்ற ஆடையை அணிந்திருந்த ஒரு சர்வாதிகாரி என்றவகையில், எவருமே இதனை வெளிப்படையாகத் துணிந்திருக்கமாட்டார்கள். ஆச்சரியம் தரும்வகையில், ஒரு வாரத்திற்குப் பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் ‘மக்கள் இப்போது என்னை சர்வாதிகாரி என்று அழைக்கிறார்கள்’, என்று குறிப்பிட்டார்.

ஜே.ஆர் ஜெயவர்த்தன நாடாளுமன்றத்தில் ஐந்திலொரு பெரும்பான்மை பலத்துடன் 1977 இல் ஆட்சிக்கு வந்தபோது, நான் பேராதனை பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். ஜே. ஆரின் ஆதரவாளர்கள் அவரது எதிராளிகளைக் கொன்றும் அவர்களது வீடுகளை எரித்தும் அவரது வெற்றியைக் கொண்டாடினார்கள். அதற்குக் காரணமும் வைத்திருந்தார்கள். 1970 இல் அவருக்கு முன் பதவிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் வலியுறுத்தினார். பிரித்தானிய ஆட்சியிசியாளர்களிடமிருந்து உண்மையான சுதந்திரத்தினை நாட்டுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக நாட்டினது அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவரும் வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பண்டாரநாயக்க பெற்றிருந்தார். இரண்டாவது தடவையாக நாட்டினது பிரதமாராக சிறிமாவோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒரு வருடத்தின் பின்னர், சிறிமாவோ பண்டாரநாயக்கவினது அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி வெடித்தபோது அவர் தனது இராணுவ இயந்திரத்தினைக் கட்டவிழ்த்துவிட்டார். 17,000 பேர் கொல்லப்பட்டார்கள். 20,000 பேர் கைதுசெய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். இவ்வாறகக் கொல்லப்பட்ட மற்றும் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களே. பிரித்தானியர்கள் சிறிலங்காவினை ஆண்ட 150 வருட காலத்தில்கூட இதுபோன்றதொரு படுகொலை இடம்பெற்றதில்லை.

ஊரடங்கு உத்தரவு தொடராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் கிராமங்களுக்கு வரும் பொலிசாரும் இராணுவத்தினரும் சந்தேகத்திற்கிடமாவர்களைக் கொலைசெய்த மற்றும் இழுத்துச்சென்ற அந்தப் பயங்கரமான எனது சிறுவயது அனுபவத்தினை நினைத்துப் பார்க்கிறேன். கிளர்ச்சியாளர்கள் காடுகளுக்குள் சென்று மறைந்துகொள்ள, கிராமங்களில் வசித்த அவர்களது உறவினர்கள் படையினரால் கொலைசெய்யப்பட்டார்கள். அவர்களது உடமைகள் எரியூட்டி அழிக்கப்பட்டன. குறிப்பிட்ட சில மக்கள் உயிருடன் எரித்துக் கொலைசெய்யப்பட்டார்கள்.

ஓர் சர்வாதிகாரிபோல நாட்டினை ஆண்ட பண்டாரநாயக்கா
அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்த அந்தக் காலப்பகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்க ஓர் சர்வாதிகாரி போலவே நாட்டினை ஆண்டுவந்தார். பொதுக்கூட்டங்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் என அனைத்துமே தடைசெய்யப்பட்டன. சில ஊடக நிறுவனங்களும் பத்திரிகைகளும் மூடப்பட்டன. நாட்டினது மிகப்பெரிய பத்திரிகை நிறுவனமாக இருந்த ஏரிக்கரை பத்திரிகை நிறுவனம் அரசுடமை ஆக்கப்பட்டது. ஓர் இராணுவ ஆட்சியின் கீழ் வாழுவதைப் போலவே மக்கள் தங்களது நாட்களை ஓட்டினர். சிறிமாவோ எதனைச் சொல்கிறாரோ அதற்கு ஆமாம் போடுபவர்களாகவே அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள். தர்மசிறி பண்டாரநாயக்கா மற்றும் சைமன் நவகத்தகம போன்ற முன்னணி நாடகக் கலைஞர்கள் “ஏக அதிபதி“ மற்றும் ‘சுய பாசா(Suba Yasa)’ போன்ற நாடகங்களை அரங்கேற்றினார்கள்.

எந்தவிதமான மக்கள் ஆணையுமின்றி சிறிமாவோ மேலும் இரண்டு வருடங்களுக்கு ஆட்சியில் தொடர்ந்தார். பெரதெனியா பல்கலைக்கழக மாணவர்களின் மீது பொலிசார் தாக்குதல்களை நடாத்தியதைத் தொடர்ந்து சிறிமாவோவினது ஆட்சி குலைந்துபோனது. இவ்வாறாக ஒரு பேய்க்குணத்தினைத் தன்னகத்தே கொண்டிருந்த சிறிமாவோ, ‘போரற்ற இந்து சமூத்திரப் பிராந்தியம்’ ஏற்படுத்தப்படவேண்டும் என வாதாடினார். சிறிமாவோவின் பிரச்சார இயந்திரங்கள் அவரை ஓர் ‘அமைதியின் தூதுவராகவே’ சித்தரித்தன.

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸ் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலின் பின்னர் அவரது அரசாங்கம் வீழ்ச்சி கண்டது. அத்தகைய கொடூரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த அதேவேளையில் ‘போர் அற்ற இந்து சமுத்திரத்தை’ உருவாக்கவுள்ளதாக அவர் பிரசாரம் செய்துகொண்டார். அவரது பிரசார இயந்திரம் அவரை ஒரு ‘சமாதான தூதுவராக’ வர்ணித்தது. ‘உக சமாதான தூதுவர்! எங்களின் கொலையாளி!’, பேராதனை பல்கலைக்கழகத்தில் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கும்போது, இந்து சமுத்திரம் போரற்ற வலயமாக விளங்கட்டும்’ போன்ற சுலோகங்களை மாணவர்கள் தாங்கிச் சென்றர். எதிர்க் கட்சிகள் அவரது ஆட்சியை ‘எழு வருடங்களுக்குத் தம்மைப் பீடித்த ஒரு பீடையாகவே’ கருதினர்.

ஜே ஆர் தலைமையிலான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இந்த சந்தர்ப்பத்தை புத்திசாதுரியமாகப் பயன்படுத்தி ‘நீதியானதும் நேர்மையானதுமான ஒரு சமூகத்தை’ உருவாக்குவதாக வாக்குறுதியளித்தது. அவர் அவசரகாலச் சட்டமின்றி சனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று கோரினார். பாராளுமன்றத்தில் ஐந்திலொரு பெம்பான்மையுடன் ஐக்கியதேசியக் கட்சி எதிர்பார்க்காத அளவு வெற்றியைப் பெற்றது. ஆனால் என்ன நடந்தது? தான் நிறைவேற்று அதிகாரமுடைய அரச தலைவராக வரக்கூடிய வகையில் ஜே. ஆர் அரசியலமைப்பை மாற்றி அமைத்தார். மக்கள் அவராவது ஏதாவது செய்யவேண்டும் என எதிர்பார்த்த, சிறிமாவோ பண்டாரநாக்காவினால் உருவாக்கப்பட்ட பொதுமக்களின் உரிமைகள் தொடர்பான சரத்தை அவர் இல்லாது செய்தார். ‘தனது பாராளுமன்றத்தால் ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர எதனையும் செய்ய முடியும்’ என அவர் வீம்புரைத்துக் கொண்டார். ஆனால் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவைக் குறைக்குமாறு எதிர்க் கட்சிகள் அவருக்கு சவால் விடுத்தன.

பண்டாரநாயக்க மற்றும் சேனநாயக்க குடும்ப ஆட்சிகளை அவர் வெறுத்தார். அவருக்கும் தற்போதைய அதிபர் ராஜபக்ச போன்று பதவி ஆசை இருந்தது. அபார வெற்றிக்குப் பின்னரும் அவரது பேச்சுக்களை கேட்குமளவுக்கு மக்களுக்குப் பொறுமை இருக்கவில்லை. ஆனால், பெருமளவு மக்களாணையுடன் வெற்றி பெற்றுக் கொண்டு பாராளுமன்றத்தை அமைப்பது என்பதையே அவர் உறுதிப்படுத்திக்கொண்டார். புராதன அரசர்கள் தமது குடிமக்களுக்கு உரையாற்றும் புனித பல் வைக்கப்பட்டிருக்கின்ற பத்திரிப்புவ எனும் இடத்தில் தனது வெற்றி உரையை ஆற்றுவதற்காக அவர் காத்திருந்தார். கண்டியில், வீதிகள் யாவும் அரசாங்கத்தாலும் அதன் ஆதரவாளர்களாலும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. அவரது மனநிலையைப் புரிந்துகொண்ட சில அமைச்சர்கள் அவர் மன்னராக முடிசூடிக் கொள்ளவேண்டும் என ஆலோசனை வழங்கினர். (ராஜபக்சவின் பிரசார இயந்திரமும் சில விடயங்களில் ஜே. ஆர் இனது நடவடிக்கைகளை ஒத்திருந்தன. விடுதலைப்புலிகளை வெற்றிகொண்ட பின்னர், உத்தியோகபூர்வமின்றி அவருக்கு சிறந்த அரசன் என்ற பட்டம் வழங்கப்பட்டது. அவருக்கு ‘மகிந்து VII அரசன்’ என்ற பட்டமும் அவரது ஆதரவாளர்களால் வழங்கப்பட்டது.)

ஜே. ஆர் அரசாங்கத்தை அமைத்த சிறிது காலத்தினுள்ளேயே தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டு அவர்களது சொத்துக்களும் எரிக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கு எதிரான பாரபட்சமும் வன்முறைகளுமே விடுதலைப்புலி பயங்கரவாதத்தைத் தோற்றுவித்த விதைகள். 1982-1984 இல் நான் யாழ்ப்பாணத்தில் ஆசிரியராகக் கடமையாற்றினேன். ஜே.ஆர் இனுடைய இராணுவம் எப்படி நடந்துகொண்டது என்பதை நான் அங்கு கண்டேன். எந்தவொரு ஆக்கிரமிப்பு இராணுவத்தையும்விட மோசமாக அவர்கள் நடந்துகொண்டார்கள். இராணுவத் தொடரணிகள் வருகின்றபோது, யாழ்-வவுனியா வீதியில் பயணிக்கின்ற அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு நிறுத்தத் தவறினால், கீழ்த்தரமான தண்டனைகளைப் பெறவேண்டும். ஒரு தடவை பேருந்து சாரதி ஒருவரை பேருந்திலிருந்து கீழே இழுத்து விழுத்தி பேருந்திலிருந்த மக்களுக்கு முன்னால் இராணுவத்தினர் அடிப்பதைக் கண்டேன். ‘அவன் ஒரு அப்பாவி மனிதன். அவ்வாறு அடிக்காதீர்கள்’, என நான் சிங்களத்தில் கத்தினேன். பின்னர் அந்தப் படையினன் அடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

படைத் தொடரணிகள் வரும்போது நிறுத்தாத வாகனங்களின் கண்ணாடிகளை உடைப்பதற்கென படையினர் எப்போதும் கைகளில் மரக் கட்டைகளை வைத்திருப்பர். 1983 இல் விடுதலைப்புலிகள் ஆயுதத்தைக் கையிலெடுத்தபோது, நாடு தழுவிய ரீதியிலான சமூகக் கலவரத்திற்கு அரசாங்கம் ஆதரவளித்தது. தமிழர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களில் இணைந்துகொண்டனர். தனக்கெதிரான எதிர்ப்பை அடக்குவதற்கு ஜே.ஆர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார். சமூக அமைதியையும் தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதையும் வலியுறுத்திய அரசியல் கட்சிகள் வன்முறைக்குத் துணைபோவதாகத் தடை செய்யப்பட்டன. அதேவேளையில், பொன்சேகாவின் விடுதலைக்குக் குரல்கொடுக்கும் மக்களி விடுதலை முன்னணியும்(ஜேவிபி)தலைமறைவாகும் நிலை ஏற்பட்டது. இவ்வாறே ஜே ஆர் இரண்டு உள்நாட்டு யுத்தங்களைத் தோற்றுவித்தார்.

1984 இல் ஒரு நாள் நான் யாழ் நகர மத்தியில் நின்றுகொண்டிருந்தபோது, சிறிலங்கா விமானப்படையினர் மக்களைக் கொன்றுவருவதாக சத்தத்தைக் கேட்டு மக்கள் சிதறி ஓடினர். ஒரு மணிநேர்ததின் பின்னர், சிங்கள ஆசிரியர் ஒருவரின் தாயார், பயத்தால் நடுங்கிக்கொண்டே பாடசாலைக்கு வந்தார். ‘நான் சுண்ணாகம் சந்தையடியில் நின்றிருந்தேன். வான்வழி வந்த படையினர் கண்மூடித் தனமாக மக்கள்மீது தாக்குதல் நடாத்தினர். பலர் கொல்லப்பட்டனர். அவர்களுள் பாடசாலை சிறுவர்களும் அடங்குவர். கர்ப்பிணித் தாய் ஒருவர் மோசமாகக் காயமடைந்துள்ளார்’, என்று கூறினார். அன்று மாலை அரச வானொலியில்: 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது. மறுநாள் யாழ் நகரில் இந்தக் கொலைகளைப் பார்த்து புத்தர் கண்ணீர் வடிப்பதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததைக் கண்டேன். இதனாலேயே ஜே. ஆர் ‘இடி அமின்’ என அழைக்கப்படுவதற்குப் பொருத்தமானவர்.

பணவீக்கத்தின் காரணமாக தொழிலாளர்கள் 300 ரூபா(8 டொலர்) சம்பள உயர்வு கோரியபோது, அரசாங்கம் 100,000 மேற்பட்ட தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியது. ஊடகங்கள் அச்சுறுத்தப்பட்டு செய்திகளும் தணிக்கைகக்கு உள்ளாக்கப்பட்டன. ‘வுhந வுசரவா’ போன்ற சில பத்திரிகைகள் வெற்றிடங்களுடன் வெளிவந்தன. சட்டத்திற்குப் புறம்பான கொலைகளுக்குப் பச்சைக்கொடி காட்டியவேளையில், மரண தண்டனை வழங்கப்படுவதை அவர் இடைநிறுத்தினார். எனினும், ஜே ஆரினுடைய பிரசார இயந்திரம் அவரை ஆசியாவின் தலைசிறந்த அரசியல்வாதி என்று புகழாரம் சூட்டியது. இதன் பிரதிபலன்கள் வித்தியாசமாக இருந்தன. பாராளுமன்றத்தில் அவர் ஒரு கூட்டத்திற்குத் தலைமை தாங்கிக்கொண்டிருந்தபோது குண்டு ஒன்று வெடித்தது. அவர் உயிர் தப்பினார். 1987 இல் ஜே ஆர் இந்தியாவுடனான அமைதி உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு அதன் விளைவாக இந்திய இராணுவம் வந்திறங்கியது.

கடைசியில் அவர் போய்விட்டார். அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த அதிபர் பிறேமதாச ஜே ஆர் உருவாக்கிய பாரங்களை சுமந்தார். அவர் வடக்கிலும் தெற்கிலும் இரண்டு உள்நாட்டு யுத்தங்களை எதிர்கொண்டார். ஜேவிபி யின் ஆயுதப் போராட்டத்தை பிறேமதாச அரசாங்கம் 1989 இல் அடக்கியது. கட்சித் தகவல்களின்படி, அரசாங்கம் 100,000 இற்கு மேற்பட்ட அதன் உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கொன்றுகுவித்தது. அந்த சூழ்நிலையில், அமைச்சரவை அதற்கு இரத்தத்தை விலையாகக் கொடுக்கவேண்டியிருந்தது. அதிபர் பிறேமதாச மற்றும் ஜே ஆரின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்கள் சிலர் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டனர். இந்தக் குழப்பத்திற்கு அரச பயங்கரவாதத்தின்மீது குற்றஞ் சாட்டவேண்டும். எனது பார்வையில் ரஜீவ் காந்திகூட ஜே ஆர் ஏற்படுத்திய சூழ்நிலையின் பலிக்கடாவே. உத்தியோகபூர்வ தகவல்களின்படி, 26 வருட கால யுத்தத்தில் 80,000 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

‘எமக்கு ஒரு சர்வாதிகாரி வேண்டுமா அல்லது சனநாயகம் வேண்டுமா?’ என சிறிலங்கா வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு இரு முறையல்ல, பலமுறை சிந்தித்திருக்க வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் இரத்த ஆறு ஓடுவதும் தொடரும். அரசாங்கம் விருப்பு வாக்கு முறைமையை நீக்குவதாக வாக்குறுதியளித்திருக்கிறது. தற்போதைய முறைமையின்படி, தனக்கு விருப்பமான ஒரு பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்வதற்குப் பாராளுமன்ற உறுப்பினருக்கு உரிமை உள்ளது. இது இல்லாவிட்டால், கட்சியின் தலைமைப் பீடமே உங்களுக்கான தெரிவுகளை வழங்கும். அது சர்வாதிகார ஆட்சி முறைமையை நோக்கிய ஒரு நகர்வாகும். தசாப்தங்களாகக் கிடைத்த பயங்கர அனுபவங்களுக்குப் பின்னர் மக்கள் சனநாயக சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும். சிறந்த ஆட்சி முறைமைக்கு பலமான எதிர்க்கட்சியும் அவசியமாகும்.
மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரமுள்ள அரச தலைவர் முறைமையை ஒழிக்க விரும்பினால் எதிர்க்கட்சிகளும் ஆதரவு வழங்கும் என நான் நம்புகிறேன். நிறைவேற்று அதிகாரமுள்ள அரச தலைவர் முறைமையை ஒழிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருந்தபோதும் சிறிலங்கா அரசதலைவர் சந்திரிகா குமாரதுங்க தனது அதிகாரங்களை இழப்பதற்கு விரும்பவில்லை.

இக்கட்டுரை லங்காஇநியூஸ் என்ற இணையதளத்தில் வெளிவந்த Idi Amin returns ‘as Asian leader’ என்ற கட்டுரையின் தமிழாக்கம் ஆகும்.

முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு பார்வை

M. ஷாமில் முஹம்மட்
Lankamuslim.org  .
ஏழாவது பாராளுமன்றத்திற்கு  உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடை பெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -20 மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகளின் படி-  பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

22 தேர்தல் மாவட்டங்களில்  225 உறுபினர்களுக்கான  தேர்தல் வியாழனன்று நடத்தப்பட்டது. ஆயினும்  20 மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகளே வெளியிடப்பட்டன. திருகோணமலை, நாவலப்பிட்டி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்குமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை 35 வாக்களிப்பு நிலையங்களில் மீள்வாக்குப் பதிவு செய்வதற்கு தீர்மானிக்கபட்டுள்ளது

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 196 உறுப்பினர்களை வாக்கெடுப்பின் மூலமாகவும் 29உறுப்பினர்களை தேசியப் பட்டியல் மூலமாக வும் தெரிவுசெய்வதற்காக ஒரு கோடியே நாற்பது லட்சம் வாக்காளர்கள் பதிவாகினர்  இதில் 36 அரசியல் கட்சிகள் மற்றும் 301 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 7620பேர்   தேர்தலில் போட்டியிட்டனர் வாக்காளர்களுக்கு  11875 வாக்களிப்பு நிலையங்கள்  வாக்களிப்பதற்கான ஏற்பாடு செய்யபட்டிந்தது

அறிவிக்கப்பட்ட 20 மாவட்டங்களிலும் 117க்கும் அதிகமான ஆசனங்களை ஐ.ம.சு.மு  வெற்றி பெற்றுள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் ஆசனங்கள் உள்ளடங்கலாக 46 ஆசனங்களை  கைப்பற்றியுள்ளது . வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி 12 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறது. ஜனநாயக தேசிய முன்னணி ஐந்து ஆசனங்களை  பெற்றிருக்கிறது.

கடந்த பாராளுமன்றத்தில் 225 உறுபினர்களில் 25 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தார்கள்  51  கபினட்  அமைச்சர்களை  கொண்ட அமைச்சரவையில் ஐந்து முஸ்லிம்கள்  கபினட் அமைச்சர்ளாக அங்கம் வகித்தார்கள் , 39 கபினட் அந்தஸ்து அற்ற அமைச்சர்களை  கொண்ட அவையில் ஐந்து  முஸ்லிம்கள்  கபினட் அந்தஸ்து அற்ற அமைச்சர்களாக அங்கம் வகித்தார்கள் மேலும் 19 பிரதி அமைச்சர்களை கொண்ட அவையில் ஐந்து முஸ்லிம்கள் அங்கம் வகிதுள்ளார்கள் கடந்த பாரளுமன்றத்தின் ஊடாக கிட்டதட்ட 15 அமைச்சர்கள் அங்கம் வகிதுள்ளார்கள் ஆக கடந்த முறை 25 பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தார்கள் அவர்களில் 15 பேர் அமைச்சர்களாக இருந்தார்கள் இதை வாசிபவர்களுக்கு ஒரு கேள்வி எழும்பும் இவ்ளவு பேர் இருந்து முஸ்லிம் சமுகத்துக்கு எதை செய்தார்கள் ??? அந்த கேள்விக்கு விடையை பின்னர் பார்போம் -

கடந்த அமைச்சரவையில் அங்கம் வகித்த ஐந்து முஸ்லிம் கபினட் அமைச்சர்கள் அவர்களின் விபரம்

1.A.H.M.பௌசி- பெற்றோல் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர்
2.பேரியல் அஸ்ரப் - வீடு அமைப்பு அமைச்சர்
3.A.L.M.அதவுல்லா- நீர் வழங்கல் வடிகாலமைப்பு
4.ரிஷாத் பதியுதீன்- மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள்
5.M.H.முஹமத்- பாராளுமன்ற விவகாரம்

கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த , கபினட் அந்தஸ்து அற்ற ஐந்து முஸ்லிம் அமைச்சர்கள் அவர்களின் விபரம்
1.M.N.அப்துல் மஜீத் -கூட்டுறவு
2.S.அமீர் அலி - அனர்த்த நிவாரணம்
3.சேகு இஸ்ஸத்தீன்- ஏற்றுமதி அபிவிருத்தி
4.S.நிஜாமுதீன்- புகையிரதம்

கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஐந்து முஸ்லிம் பிரதி அமைச்சர்கள் அவர்களின் விபரம்

1.பைசர் முஸ்தபா -சுற்றுலாத்துறை
2.M.M.முஸ்தபா-மயோன் முஸ்தபா -உயர்கல்வி
3.A.K பாயிஸ்-கால் நடை அபிவிருத்தி
4.M.C.முஹமத் பைசல் -விஞ்ஞான தொழில்நுட்பம்
5.ஹுசைன் பஹிபிலா-வெளி நாட்டு விவகாரம்


கடந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த 25 முஸ்லிம் உறுப்பினர்கள் இடம்பெற்ற னர்

1.A.H.M.பௌஸி
2.பேரியல் அஸ்ரப்
3.A.L.M.அதவுல்லா
4.ரிஷாத் பதியுதீன்
5.M.H.முஹமத்
6.M.N.அப்துல் மஜீத்
7.S.அமீர் அலி
8.சேகு இசத்தீன்
9.S.நிஜாமுதீன்
10.பைசர் முஸ்தபா
11.M.M.முஸ்தபா
12.A.K. பாயிஸ்
13.ஹுசைன் பஹிலா
14.A.R.அஞ்சான் உம்மா
15.A.R.M.அப்துல் காதர்
16.அலி ஹசன்
17.பைசல் காசிம்
18.அப்துல் ஹலீம்
19.ரவுப் ஹகீம்
20.கபீர் ஹாசிம்
21.R.M.இமாம்
22.M.M.மஹ்ரூப்
23.M.முஸாமில்
24.A.M.M.நௌசாத்
25.ரஜாப்தீன் முஹமத்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 'மஹிந்த சிந்தனை ல் குறிப்பிட்டுள்ளது போல் அமைச்சவையை தெரிவு செய்ய நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. அமையவுள்ள அமைச்சரவை மிகச் சிறிய எண்ணிக்கையை கொண்டதாகவே அமையும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். முழு தேர்தல் முடிவுகளும் வெளிவந்த பின்னர் இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் எத்தனை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளார்கள் எத்தனை பேர் தெரிவாக விலை எத்தனை புதிய முகங்கள் தெரிவாகியுள்ளன முஸ்லிம்கள் எத்தனை அமைச்சுகளை பெற போகின்றார்கள் என்பதை பார்போம் நடைமுறை அரசியலை விளங்கி கொள்ளவேண்டும் என்பதற்காக மட்டும்தான் இந்த ஆக்கத்தை தருகின்றேன் 

போர்க் குற்றங்கள் : மெதுவாக குறிவைக்கப்படும் சிறிலங்கா


அறுபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திரமடைந்ததாக கூறப்படும் சிறீலங்கா, வரலாற்றில் என்றுமில்லாத அளவு சர்வதேச அழுத்தங்களுக்கு முகம்கொடுத்து நிற்கிறது.



சிறீலங்கா மேற்கொண்ட போருக்கு ஆதரவு வழங்கிய தரப்புகளில், இரு பெரும் சக்திகளான அமெரிக்காவும், பிரித்தானியாவும் இந்த அழுத்தத்தை வழங்குவதில் முன்நிற்கின்றன.

நடைபெற்று முடிந்த போரில், ஆயிரக்கணக்கான [ஐ.நாவின் முன்னால் பேச்சாளரின் கருத்துப்படி இறுதிக் கட்டப் போரில் மட்டும் சுமார் 40 ஆயிரம்] மக்கள் கொல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து சர்வதேச அழுத்தங்கள் படிப்படியாக ஆரம்பித்தன.
இதன் ஒரு கட்டமாக, இலங்கைத் தீவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் [UN Human Rights Council] விசேட அமர்வொன்று இடம்பெற்றது.

இதனை மேற்கத்தேய நாடுகளே முன்மொழிந்ததுடன் அதில் அக்கறையும் செலுத்தியிருந்தன.

ஆனால், அன்றைய காலப் பகுதியில், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவராக ஜெனிவாவில் பணியாற்றிய தடயான் ஜயதிலக்க தனது இராஜதந்திர சாணக்கியத்தின் மூலம் அதனை முறியடித்திருந்தார்.
டயான் ஜயதிலக்க சிறீலங்காவினுடைய இராஜதந்திரிகளில் தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்தவர்.

அதேவேளை முன்னால் ஜெனரல் சரத்பொன்சேக கள முனையில் வழங்கிய பங்களிப்புக்கு நிகரான பங்களிப்பை சர்வதேச ரீதியில் வழங்கியவர்.
ஜெனரல் சரத்பொன்சேகவை தேசிய கதாநாயகனாகவும், திரு.டயான் ஜயதிலக்கவை சிறீலங்காவின் சர்வதேச கதாநாகனாகவும் சில மாதங்களுக்கு முன்னர் உள்நாட்டு ஊடகங்கள் வர்ணித்திருந்தன.
ஆனால் இன்று, சிறீலங்கா மேற்குலகிலிருந்து எதிர்நோக்கியுள்ள நெருக்கடியை சமாளிப்பதற்கு திரு.டயான் ஜயதிலக்க சிறீலங்காவின் இராஜதந்திரப் பணியில் “நேரடியாக” இல்லை.
மனித உரிமை மீறல் தொடர்பாக எழுகின்ற குற்றச்சாட்டுகளில், பிரதானமானதாகவும் சவால் மிக்கதாகவும் போர்க் குற்றச்சாட்டே முன்வைக்கப்படுகிறது.
அதனை மகிந்த நிர்வாகம் அடியோடு மறுத்து வருகிறது.
ஆனால், ஒரு காலத்தில், தேசிய கதாநாயகனாகப் பார்க்கப்பட்ட முன்னாள் ஜெனரல் சரத்பொன்சேகவே போர்குற்றம் இடம்பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.
இது மகிந்த நிர்வாகம் கடும் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு வழிவகுத்தது.
ஏனெனில், 4ம் கட்ட ஈழப்போரின் முக்கியமான கட்டங்களிலிருந்து அது நிறைவடையும் வரை சிறீலங்காவின் இராணுவத் தளபதியாக ஜெனரல் சரத்பொன்சேகவே இருந்தார்.
சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளரே போர்க்குற்றம் இழைத்தமைக்கான பொறுப்பெனவும், அது தொடர்பான விபரங்களை தான் சர்வதேச சமூகத்திடம் தெரிவிக்கத் தயார் எனவும் தடுப்புகாவலில் வைக்கப்படுவதற்கு முன்னர் ஜெனரல் சரத்பொன்சேகா ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
அதேவேளை, போர் நடைபெற்று முடிந்த பிற்பாடு அம்பலாங்கொடையில் பேசும் போது, தனது படையினர் போரில் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக தாம் போர் மரபுகளை மீறிச் செயற்பட்டதென்ற கருத்தை முன்னால் ஜெனரல் சரத் பொன்சேகா தன் வாயாலேயே கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தத்தில், சிறீலங்காவின் ஆயுதப் படையினர் போர்குற்ற மீறல்களை நிகழ்தியிருக்கின்றனர் என்பதை அதில் தொடர்புடைய பொறுப்புமிக்க தரப்புகளே ஏற்றுக்கொண்டுள்ளன.
அதேவேளை, போர்குற்றம் இழைக்கப்பட்டு பெறப்பட்ட வெற்றியின் கதாநாயகர்களில் பிரதானமானவரும் மகிந்த நிர்வாகத்துடன் இல்லை.
அத்துடன், அந்த போர்குற்ற மீறல்களை நியாயப்படுத்திய சிறீலங்காவின் சர்வதேச கதாநாயகனும், சர்வதேச ரீதியாக போர்குற்றச்சாட்டு முதன்மை பெற்றுள்ள தருணத்தில் மகிந்த நிர்வாகத்துடன் இல்லை.
போர்குற்ற மீறல்களை போரில் ஈடுபட்ட இரு தரப்புமே மேற்கொண்டதாக கூறப்படுகின்ற போதும், அதில் மற்றத் தரப்பான விடுதலைப் புலிகளில் அதற்கு பொறுப்பான யாரும் உயிருடன் இல்லை.
ஆதலால், சிறீலங்காத் தரப்பினரே பொறுப்புக்குரிய பிரதான தரப்பாக மாறியுள்ளது.
அத்துடன், பாரிய போர்க்குற்றச் செயல்களை சிறீலங்கா ஆயுதப் படையினரே நிகழ்தியுள்ளனர் என்ற கருத்து சாட்சியங்களுடன் மேலோங்கி வருகிறது.
போர்குற்றச்சாட்டு விடயம் இன்றோடு அல்லது இன்னும் சிறிது காலத்தோடோ முடிவுக்கு வரப்போவதில்லை.
இனிவரும் காலத்தில்தான், அதனுடைய கூரியமுனை சிறீலங்கா மீது பாயவிருக்கிறது.
அதனடிப்படையில், போர்குற்றம் தொடர்பான பின்புலத்தை அலசி, அது எவ்வாறு இலங்கைத் தீவின் இன்றைய நிலைப்பாட்டோடு தொடர்புபடுகின்றது என்பதை ஆய்வுக்கு உட்படுத்துகிறது இந்த கட்டுரை.
பல நூற்றாண்டுகளாக நீதியை நிலைநிறுத்துவதற்கான மரபுகள் நிலவி வந்த போதும், இவை யாவும் முதல் மற்றும் இரண்டாவது முறையாக சர்வதேச சட்டங்கள் என 1899 மற்றும் 1907ம் ஆண்டுகளின் ஹேக் சமவாயங்களிலேயே [Hague Conventions] ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டன.
இவற்றின் தொடர்ச்சியாகவே ஜெனிவா சமவாயமும் [Geneva Convention] நோக்கப்படுகிறது.
நான்கு ஜெனிவா சமவாயங்களுக்கும் பொதுவான சரத்து 3 சர்வதேச சட்ட மரபுகளை பிரதிபலிக்கிறது.
சட்டங்களை அல்லது போர் மரபினை மீறுகிறமை போர்க் குற்றம் எனப்படும்.
படுகொலை செய்தல் அல்லது சர்வதேச தராதரங்களுக்கு புறம்பான வகையில் போர்கைதிகளை கையாளல், கைதுசெய்யப்பட்டவர்களை அல்லது நிபந்தனையின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை கொல்லுதல், தீயநோக்கோடு மாநகரங்களை, நகரங்களை மற்றும் கிராமங்களை அழித்தல் போன்ற விடயங்கள் போர்க் குற்றத்துக்குள் உள்ளடக்கப்படுகின்றன.
போர்க்குற்றங்களின் நவீன கால கோட்பாட்டு அபிவிருத்தியாக 1945 ம் ஆண்டு ஒகஸ்ட் 8ம் திகதி வெளியிடப்பட்ட இலண்டன் பட்டயத்தை [London Charter] அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூரன்பேர்க் தேர்வாய்வு [Nuremberg Trials] காணப்படுகிறது.
அத்துடன், குறித்த பட்டயம் சமாதானத்திற்கு எதிரான குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றம் ஆகியவற்றையும் வரையறை செய்கிறது.
சிறீலங்கா மீதான போர் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு கொண்டுவரப்பட்ட போது, ரஷ்யாவும் சீனாவும் தமது 'வீற்றோ' அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்திருந்தன.
அதேவேளை, சிறீலங்கா மீதான போர்க்குற்றச் சாட்டுக்கள் விசாரிக்கப்பட வேண்டும் என எந்தவொரு அரசும் இதுவரை இராஜதந்திர காரணங்களுக்காக தனித்து முறையிடவில்லை.
அதனால், சிறீலங்கா அரசு இழைத்த போர்குற்றச்சாட்டுக்கள் நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்துக்கோ [International Court of Justice- ICJ] அல்லது போர் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பான தனிநபர்கள் இதுவரை ஆக்கபூர்வமான முறையில் குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்படாமையால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கோ [International Criminal Court - ICC] செல்லும் வாய்ப்பையும் பெறவில்லை.
ஆயினும், இவை எதிர்காலத்தில் இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் தென்படுகின்றன.
நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தில் முதலாவது முறைப்பாட்மை பிரித்தானிய 1947 மே 22 ம் திகதி அல்பானியாவுக்கு எதிராக மேற்கொண்டிருந்தது.
அதே பிரித்தானியாவே, இன்று சிறீலங்கா தரப்பு மேற்கொண்ட போர் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என முன்நிற்கிறது.
அதேவேளை, இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிபெறும் இன்னொரு மார்க்கமாக, இத்தாலியில் ஸ்தாபிக்கப்பட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் [Permanent Peoples' Tribunal] திகழ்கிறது.
இது அரசுகளிலிருந்து அப்பாற்பட்டதாகவும், சுயாதீனமான ஒரு கட்டமைப்பாகவும் இயங்குகிறது.
இந்த நிரந்தர மக்கள் நீதிமன்றமே, சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணையை கடந்த ஜனவரி மாதம் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடாத்தியது.
விசாரணையின் முடிவில், சிறீலங்கா அரசு போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் அநீதியை இழைத்துள்ளதாக தீர்ப்பு வழங்கியது.
இந்த அமைப்பு, உலகின் முதலாவது இனப்படுகொலையான ஆர்மேனியா இனப்படுகொலை [Genocide] தொடர்பான முக்கியத்துவம் மிகுந்த தீர்ப்பை 1984 ஏப்ரல் 16ல் வழங்கியிருந்தது.
ஆகவே, சிறீலங்கா அரசாங்கம் தொடர்பாக நிரந்தர மக்கள் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முக்கியத்துவம் மிக்கது எனக் கருதலாம்.
அந்த தீர்ப்பில், சிறீலங்கா அரசாங்கம் போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம் ஆகியவற்றை புரிந்ததாகவும், சிறீலங்கா அரசாங்கம் மீதான இனப்படுகொலை தொடர்பான முறைப்பாடுகளுக்கு மேலதிக விசாரணை தேவை மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தமைக்கு சர்வதேச சமுகமே பொறுப்பு, குறிப்பாக அமெரிக்காவும் பிரித்தானியாவுமே இந்த பொறுப்பினை பகிர்ந்துகொள்ள வேண்டுமென தெரிவித்திருந்தது.
இந்த தீர்ப்பு வெளியாகி சுமார், இரண்டரை மாதங்கள் கழிந்த நிலையில், கடந்த காலத்தில் சிறீலங்காவுக்கு ஆயுதங்களை வழங்கியதற்காக பிரித்தானிய மனவருத்தம் தெரிவித்துள்ளதோடு, எதிர்வரும் காலப்பகுதியில் சிறீலங்காவுக்கு ஆயுதங்கள் வழங்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அறியவருகிறது.
அத்துடன், ஐ.நா செயலாளர் நாயகம் சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தனக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவை, சிறீலங்கா அரசின் மறைமுகச்செயற்பாடுகள் காரணமாக அணிசேர நாடுகள் [Non- Aligned Movement] ஆரம்பத்தில் எதிர்த்திருந்தன.
ஆனால், தற்போது தமது நிலைப்பாட்டை மாற்றி அந்த விசாரணைக்குழுவுக்கு தமது ஆதரவினை தெரிவித்துள்ளன.
இதில், பிரித்தானியாவின் வகிபாகத்தால் சிறீலங்கா தரப்புகள் சினம்கொண்டுள்ளன.
அதேவேளை, மனித உரிமை நிலைகள் மோசமடைந்து வருவதால், சிறீலங்காவுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் [GSP+] சலுகை இடைநிறுத்தப்பட்டது. இதிலும் பிரித்தானிய முக்கிய பங்கு வகித்தது.
இவை சிறீலங்கா அரசாங்கத்தின் மீது சர்வதேச ரீதியாக அதிகரித்துவரும் நெருக்கடியை கோடிட்டுக் காட்டுகின்றன.
அதேவேளை, பர்மாவில் [மியான்மார்] நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானியா அண்மையில் அறிவித்திருந்தமை கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
இது, சீனாவுக்கு விரும்பத்தக்கதல்ல. ஆயினும், எதிர்ப்புகளை ஒரு புறம் தள்ளியபடி, பிரித்தானிய முக்கியமான ஒரு நகர்வை துணிகரமாக மேற்கொள்கிறது.
அதேவேளை, சிறீலங்கா தொடர்பாக சீனா தொடர்ந்தும் ஆதரவு நிலைப்பாட்டையே எடுக்கும் என எதிர்பார்க்க முடியாது.
சீனாவின் அரசியல், இராணுவ, பொருளாதார நலன்களை கவனத்திற்கொள்ளும் போது, ஈரானுடன் ஒப்பிடுமிடத்து சிறீலங்கா சீனாவுக்கு ஒரு சிறிய பகுதிதான்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக அண்மையில் மூன்று தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
இந்த தீர்மானங்களை சீனா எதிர்க்கவில்லையென்பது முக்கியத்துவம் மிக்கது.
இதில், மேற்குலகின் இராஜதந்திரம் செல்வாக்கு செலுத்தியது.
ஆகவே, மேற்குலகால் சிறீலங்காமீது முன்னெடுக்கப்படும் போர் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு சீனா எதிர்ப்புத் தெரிவிக்காத தன்மை தோன்றக்கூடிய சாத்தியப்பாடுகள் முன்னரை விட தற்போது அதிகமாகத் தென்படுகின்றன.
அதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது அதனை முறியடிக்கத் துணைபுரிந்த இந்தியா, தற்போது அணிசேர நாடுகள் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு எதிராக இதுவரை எத்தகைய நடவடிக்கைகளிலும் இறங்காமல் உள்ளமை கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்.
இது, இந்தியா இலங்கைத் தீவு தொடர்பாக எடுக்க இருக்கும் கொள்கைமாற்றம் ஒன்றிற்கான ஆரம்பப் புள்ளியா என்ற வினாவை எழுப்புகிறது.
அத்துடன், இராணுவப் பயிற்சிகள் தொடர்பாகவும், அதில் சிறீலங்காவிலும், அமெரிக்காவிலும் குறித்த நாட்டுப் படையினர் பங்குபற்றுவது தொடர்பாக உருவான முறுகல் நிலை உச்சநிலையை தொட்டுநிற்கிறது.
இது, சிறீலங்கா, பிரித்தானியாவுடன் மட்டுமல்ல அமெரிக்காவுடனும் முரண்பாட்டுநிலையை தொடர்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
ஆகவே, அமெரிக்காவும் பிரித்தானியாவும் முதன்நிலை வகிக்கும் சர்வதேச சமூகத்தோடு, குறிப்பாக மேற்குலகோடு சிறீலங்கா அரசு வேண்டத்தகாத விளைவுகளை உண்டாக்கக்கூடிய முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
மேலே கூறப்பட்ட பல புள்ளிகளையும் ஒன்றாக இணைக்கும் போது ஒரு கோலம் உருவாகிறது.
இந்தக்கோலம், சிறீலங்கா வரலாற்றில் என்றுமில்லாத நெருக்கடியை சர்வதேச ரீதியாக எதிர்கொள்ளப்போகிறது என்பதற்கான குறிகாட்டியாகும்.
இதனை ஈழத்தமிழ் மக்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்பது அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் காத்திரமான பங்கினை வகிக்கும்.

ச.பா.நிர்மானுசன்
www.tamilwin.com

திங்கள், 5 ஏப்ரல், 2010

ஸாராஹ் மாலினி பெரேரா என்ற முஸ்லிம் எழுத்தாளரும் தடுப்பு காவலும்

M.ஷாமில் முஹம்மட்

பௌத்த மத கடவுள் மீது சிறு நீர் கழித்து, அதை உடைத்து தகர்த்தவர்கள் தேச தலைவர்கள் பௌத்த மத கோட்பாடுகளை ஒப்பிட்டு ஆய்வு செய்த எழுத்தாளர் தேசதுரோகி வாழ்க இலங்கை ஜனநாயகம்

சில திங்களுக்கு முன்னர் தம்புள்ள பிரதேசத்தில் 'இளமல்பொத' பகுதியில் அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவருமான ஜானக பண்டார தென்னக்கோன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னக்கோன் ஆகிய இருவரும் புத்தர் சிலை ஒன்றை தாக்கி சேத படுத்தியதாக சண்டே லீடர் பத்திரிகை தெரிவிக்கின்றது இவர்கள் சிங்கள பௌத்தர்கள் என்பது குறிபிடதக்கது இது பற்றி மேலும் தெரிவிக்கையில் இரு பாராளுமன்ற ஆளும் தரப்பு வேட்பாளர்கள் மத்தியில் ஏற்பட போட்டியின் விளைவு தென்னக்கோன்களின் ஆதரவாளர்கள் புத்தர் சிலைக்கு அருகில் சிறுநீர் கழித்த பின்னர் அதனை தாக்கி உடைத்துள்ளனர் - புத்தர் சிலையின் தலையும் , ஒரு பக்க காலும் முற்றாக தகர்த்து வீசப்பட்டுள்ளது-என்றும் இந்த புத்தர் சிலை தாக்குதல் சம்பவத்தில் தென்னக்கோனும் நேரடியாக தாக்குதலில் பங்கு பற்றியதாகவும் எனிலும் போலீஸ் அமைச்சர் தென்னக்கோனின் சில ஆதரவாளர்களை ஒரு நாள் மட்டும் போலீஸ் நிலையத்தில் வைத்திருந்து மறுநாள் எந்த குற்ற சாட்டுகளும் இன்றி விடுதலை செய்ததாகவும் பௌத்த தேரர் ஒருவரை ஆதாரமாக கொண்டு செய்தி வெளியிட்டுள்ளது

இதனுடன் ஸாராஹ் மாலினி பெரேராவின் குற்றசாட்டுடன் ஒப்பிட்டு நோக்கினால் இங்கு இலங்கை அரசியலுக்கு பௌத்த மதம் ஒரு வாகனமாக பயன் படுத்த படுவது தெரிகின்றது தமக்கு தேவையான போது பௌத்த மதத்தை பாதுகாப்பதை போன்று பௌத்த சிங்கள மக்களை உணர்வூட்டி பௌத்த மேலாதிக்கத்தை தூண்டி விடுவதும் , அதே பௌத்தம் தமது அரசியல் தேவைகளுக்கு இடையூறாக காணும் போது அதை முன் நின்று அழிக்க துணிவதும் இதைதான் காட்கின்றது ஸாராஹ் உண்மையான குற்றவாளியாக இருப்பின் அவரின் குற்றம் பகிரங்க படுத்த பட வேண்டும் ஆனால் அவர் இதுவரை கைது செய்யப்பட்டு ௧௫ நாட்களை எட்டியும் இதுவரை அவர் மீதான குற்றம் எதுவும் குறிபிடபடவில்லை ஸாராஹ்வை தொடர்ந்து தடுப்பு காவலில் வைப்பதன் ஊடாக சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் பௌத்த சிங்கள பேரினவாத சக்திகள் தமது வாக்கு வங்கிகளை பலப்படுத்தி கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

யுத்தம் முடிவடைந்த நிலையில் சிங்கள இனவாத சக்திகள் தம்மை தக்க வைத்து கொள்ள புதிய வழிகளை ஆராய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது இலங்கையின் அதிகார பூர்வமான மதமாக பௌத்த அரசியல் யாப்பினால் உறுதிபடுத்த பட்டுள்ளது எனிலும் பௌத்த இனவாத சக்திகள் பௌத்த மதத்தை வளர்ப்பது , பாதுகாப்பது என்பதை விடவும் மாற்று மத , இன விரோத அரசியல் செய்வதில் தான் அரசியல் இலாபங்களை அடைய முனைவதாக தெரிகின்றது


ஸாராஹ் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட கால பகுதியில் இருந்து கடந்த பத்து வருடங்களாக ஆய்வு செய்தது தொகுத்த கிறிஸ்தவம் , ஹிந்துவம் , இஸ்லாம், பௌத்தம் ஆகிய மதங்கள் பற்றிய ஒப்பிட்டு ஆய்வையும் , தனது சொந்த இஸ்லாம் நோக்கிய பயணம் பற்றிய அனுபவங்களையும் இரண்டு நூல்களா பதிவு செய்தார் , இவற்றில் எந்த மதத்தையும் தரக்குறைவாக விமர்சிகின்ர ஆக்கங்கள் எதுவும் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை , இவரின் சட்டத்தரணி அலெக்ஸ் பெர்னாண்டோ BBC சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியில் ஸாராஹ்வின் தடுப்புகாவல் சட்டவிரோதமானது என்று குறிபிட்டுள்ளார் என்பதுடன் தனக்கு இவரின் கைதுக்கான காரணம் இன்னும் அறிவிக்கபடவில்லை என்றும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஸாராஹ்வுக்கு கூட கைதுக்கான காரணம் அறிவிக்கபடவில்லை என்று கூறியுள்ளார் என்பதுடன் மத சகிப்புதன்மை இல்லாமையால் ஏற்பட்ட கைது என்றும் கூறியுள்ளார் ஆக ஸாராஹ்வின் கைது மத சகிப்புதன்மை இல்லாமையனதும் , இனவாத அரசியல் தேவையினதும் கைது மொத்தத்தில் ஸாராஹ்வின் சட்டத்தரணி கூறுவதை போன்று இவரின் தடுப்புகாவல் சட்டவிரோதமானது


இவரின் சகோதரி மரியம் இது பற்றி கூறுகையில் இவர் இஸ்லாத்தை தழுவி கொண்ட கால பகுதியில் இருந்து இஸ்லாத்தையும் மற்ற மதங்களையும் ஒப்பிட்டு நூல் ஒன்றை எழுதிகொண்டிருந்தார் என்றும் எழுதும் பணி கடந்த வருடம் நிறைவடைந்ததாகவும் -2009 - விடுமுறையில் இலங்கை சென்ற ஸாராஹ் மாலினி பெரேரா தனது சிங்கள மொழி புத்தகங்களான From Darkness to Light இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு என்ற தலைப்பிலும் இரண்டாவது Questions and Answers கேள்விகளும் பதில்களும் என்ற தலைப்பிலும் எழுதி முடித்திருந்த ஆக்கங்களை இரு புத்தகங்களாக பதிப்பு செய்து அவற்றில் ஒரு பகுதியை கார்கோ முகவர் ஒன்றின் ஊடாக அனுப்பும் வேளையில் குறித்த கார்கோ முகவர் நிலையத்தின் உரிமையாளர் போலீசாரை அழைத்து இந்த புத்தகங்கள் புத்தரை நிந்திபதா கூறி போலீஸில் முறையிட்டுள்ளார் இவர் தீவிர இனவாத அமைப்பான சின்ஹல உரிமையவுடன் தொடர்பு கொண்டவராக இருக்கலாம் என்று மரியம் கூறியுள்ளார் இவர் இலங்கையில் தனது விடுமுறையை முடித்து கொண்டு பஹ்ரை நாட்டுக்கு செல்வதற்காக கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி விமான நிலையம் சென்ற போது விமான நிலையத்தியில் வைத்து கைது செய்யப்பட்டு மிரிஹான போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு போலீஸ் கட்டுபாட்டில் இயங்கும் ஒரு சிறை கூடத்தில் தடுத்து வைக்கபட்டுள்ளார் இவர் DO- detention orders தற்போது தடுப்பு காவல் கட்டளை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கபட்டுள்ளார் இந்த D.O கட்டளை சட்டம் என்பது ஒருவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தாமல் 30 நாட்கள் வரை போலிஸ் தடுப்பு காவல் விசாரணைக்காக தடுத்து வைக்க முடியும் 30 நாட்கள் முடியும் போது மீண்டும் பல தடவைகள் 30 நாட்கள் நீடிப்புகளை போலீஸ் பெற்றுக்கொள்ள முடியும் தடுப்பு காவல் கட்டளை பாதுகாப்பு அமைச்சினால் வளங்கபடுகின்றது என்பது குறிபிடதக்கது

ஸாராஹ் மாலினி பெரேரா பற்றி சண்டே லீடர் குறிபிடுகையில் சண்டே லீடர் பத்திரிகையின் விசேட செய்தி பிரிவு மிரிஹான போலீஸ் நிலையத்துக்கு விஜயம் செய்து இன்ஸ்பெக்டர் உதைய குமார , OIC பிரதீப் ரத்னாயகே ஆகியோருடன் சந்தித்து பேசியுள்ளது எனிலும் இருவரும் ஸாராஹ் மாலினி பெரேராவுக்கு எதிரான குற்றசாட்டின் பெயரை கூற மறுத்து விட்டனர் என்றும் இந்த விடையம் தொடர்பாக எந்த தகவலும் தர மறுத்து விட்டதாகவும் சண்டே லீடர் பத்திரிகை குறிபிட்டுள்ளது

ஸாராஹ் மாலினி பெரேராவின் சட்டத்தரணி உயர் நீதி மன்றத்தில் உடனடியாக ஸாராஹ்வை விடுதலை செய்ய கோரும் வழக்கு ஒன்றை பதிவு செய்தும் தடுப்பு காவலில் வைக்க பட்டிருக்கும் ஸாராஹ்வை கோட்டுக்கு கொண்டு வர முடியவில்லை இன்றுடன் இவர் கைது செய்யப்பட்டு 14 தினங்கள் கழிந்துள்ளன எனிலும் இது வரை போலீஸ் இவர் மீது எந்த குற்றசாட்டையும் முன்வைக்க வில்லை இவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் முதல் தடவையாக தனது தாயுடன் தொலை பேசியில் பேசுவதற்கு 5 நிமிடங்கள் மட்டும் அனுமதிக்க பட்டுள்ளார் என்பது குறிபிட தக்கது

தற்போது ஸாராஹ்வின் சட்டத்தரணி தெரிவித்தாக தெரிவிக்க படும் செய்தி ஒன்றில் போலீஸ் ஸாராஹ்வை இஸ்லாமிய ஆயுத குழுக்களுடன் தொடர்பு இருக்கின்றதா என்பது பற்றி விசாரிப்பதாகவும் ஆனால் ஸாராஹ்வுக்கு அப்படி எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார்.