பின்த் அன்சார், இஸ்லாஹிய்யா அறபுக் கல்லூரி
ஈமானின் ஒளியில் பிரகாசிக் கும், இறைவனின் பொருத்தம் பெற்று நட்பினுள் நனையும் என் ஈமானிய தோழிக்கு...
என் வாழ்வின் எத்தனையோ அனுபவப்பக்கங்களை நீ புரட்டி ரசித்து வாசித்திருப் பாய். அதுபோல் இன்றும் என் உள்ளம்அனுபவிக் கும் ஆனந்தத்தின் வரிகளை யும் வெறும் ரசனையாய் மட்டும் கொள் ளாது உன் தோழியின் அழகிய ஈமானின் புதுப்பித்தலாயும், இறையோ னின் அத்தாட்சியின் மிளிரலாயும் மனதினுள் எழுதிக் கொள்.
அன்று ஜனவரி பதினைந்தாம் திகதி ஏற்கனவே நீயும் எதிர்வு கூறப்பட்ட அந்நிகழ்வை அறிந்தி ருப்பாய். வழமையான வெயிலின்உஷ்ணத்தை காணவில்லை. உச்சி வெயில் எங்கே என தேடுதல் நடத் திய நேரம்... நண்பகல் பன்னிரண் டைத் தாண்டியிருக்கும்.வளாகம் மெல்லிய இருளால் போர்த்தப் பட்டிருப்பதைக் கண்டு உள்ளங்க ளின் சப்தம் மெல்ல மெல்ல அதி கரிக்கத் தொடங்கிற்று.ஏதோ வொன்றை புரிந்தவர்களாய் வளாக உறவெல்லாம் ஆகாயத்தை நோக்கி பார்வையை விட்டோம்.
ஆம், அங்கே சூரிய கிரகணத் தின் தெறிப்புப் படம் அப்படியே எம் வெற்றுக் கண்களில் பளிச்சிட் டது. நிலவின் பாதி உருவை பறித் துக்கொண்டது போல என் விழிக ளில் அக்காட்சி பதிவாகியது. அப் போது நான் பெருமானாரின் வாழ்க் கைக்குள் புகுந்துவிட்டேன். சிலநேரம் உனக்கும் இப்படியான சந்தர்ப்பங்களில் பெருமானாரின் வழிமுறைகளின் சம்பவங்கள் தெரிந்திருக்கும். அதுபோல எனக் கும்உடனேயே நபியவர்கள் இப் படியான கிரகண நிகழ்வுகளின் காட்சியை கண்டுவிட்டால் அவ ரின் உடல் பயத்தால் நடுங்கும். என்னநேர்ந்துவிடுமோ... என்ற அச்சத்தால் அழுவார்கள். அவர்க ளின் இரு கரங்களும் படைத்தவ னையே நோக்கி நிற்கும். அவனதுதுதிபாடும். இறைமறையை பறை சாற்றும். அந்த ஞாபகங்கள் என் னுள்ளும் தோன்றி மறைந்தன.
மனதினுள் தெம்பு பிறக்க என் சொந்தங்களோடு ஓடோடிச் சென்று வுழூ செய்து தொழுகைக்காய் தயாரானேன். தோழி! எல்லோரும்வெண்ணிற ஆடையோடு... பார்ப் பதற்கே விழிகள் குளிர்ந்தன. உள்ளங்களெல்லாம் ஒன்றிணைந் தது போல ஓர் உணர்வு. அமைதி யானகனங்களில் இதமான தக்பீர் சத்தம். ஏகனோடு சங்கமித்தேன். சில மணித்தியாலங்களின் பின் விரிந்த நெஞ்சத்தோடு சுமைகளைஇறக்கிய திருப்தியோடு எம் ஸலாம்கள் பெருமூச்சு விட்டன. கன்னங்களில் இலைகளில் வடி யும் நீர்த்துளியைப் போன்று கண் ணீர்மணிகள் ஓடின. எம் உதடுகள் இரண்டும் நடுநடுங்கி அவன் பக் கமே மீண்டு அவனையே வேண்டி நின்ற அந்நிமிடங்கள் என்னுள்மோதுகின்றன.
மெதுவாய் ஆகாயத்தில் விழி கள் சுற்றிவர அல்ஹம்துலில்லாஹ். எம் பிரார்த்தனைகள் அவன் அங்கீ காரம் பெற்றிற்று என்பதனைபூமி யில் தெறிப்படைந்த பூரண ஒளிக் கீற்றுக்கள் தெளிவாய்ச் சொல்வது போலிருந்தது. அதுமட்டுமா மண் ணில் விழும் நிழல்களின்அதிசயத் தையும் சொல்லவா வேண்டும்! இயற்கையை அலங்கரிக்கும் பச்சை இலைகளின் நிழல்கள் பாதி நிலவை ஒத்ததாய்இருந்ததை என் கண்க ளாலேயே பார்த்தேன்.
உண்மையிலேயே என் வாழ்வின் மறக்க முடியாத இறை நினைவில் அவன் அத்தாட்சிகளில் என் உள் ளம் வியந்த பெரும் அனுபவமொன்றே என்று தான் எண்ணு கின்றேன் தோழி! இதுவரையும் எத்தனையோ கிரகணங்கள் வந்து போயிருக்கும். ஆனால், இறை வஹியின் நிழலிலேயே சுவாசமளித்தி டும் இறையருளை சுமந்த மண்ணிலே அந்தப் பாக்கியம், அருள் கிடைத்ததே. அதுதான் உறவேதாளாத பெரும் மகிழ்ச்சியாக இருக் கிறது. அந்நேரம் இந்நிகழ் வில் கண் டும், காணாமலும் எத்தனை உள் ளங்கள் பாராமுகமாய்இருந்திருக் கக் கூடும்.
இறைவனை நினைக்காது வெறும் நிகழ்வாய் மட்டும் எத்தனை உள்ளங்கள் ரசித்திருக்கக் கூடும். நீ உன் சிந்தனையை பயன்படுத்திஅல்லாஹ்வின் அற்புதத்தைப் பார்த் திருப்பாய் என்ற நம்பிக்கை எனக் கிருக்கின்றது. அந்நேரமே உன் பக்கம் இருந்து என் மனப் பதிவுகளை பகிர்ந்துகொள்ள வேண்டும் போலிருந் தது.
அக்கணங்களில் எம்மைப் படைத்தவன் அவன் அத்தாட்சி களை சிந்திப்பதற்காக வும் அவனி டமே கையேந்துவதற்காகவுமேநாடியிருந்தான் போலும்.
இவை எல்லாம் வான் மண்ட லத்தில் கோள்களினதும் சூரியனி னதும் சுழற்சியில் ஏற்படும் மாற் றம் என்ற ஒரே கண்ணோட்டம்எம்முள்ளும் நிலவிடக் கூடாது. புறக் கண்ணால் மட்டும் பார்த்து விட்டு மறந்துவிடும் வெறும் காட்சி களாகவும் அவை இருந்திடக்கூடாது.
இஸ்லாத்தின் ஒளியில் ஆழமான கண்ணோட்டத்தில் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண் டும். இதுவும்கூட இம்மைவாழ் வின் அழிவிற் கான ஓர் நிகழ்வாக அமையலாம் அல்லவா? மறுமை யின் ஞாபகப்படுத்தல்கள் அடிக் கொருதடவை உள்ளத்தைப்பரிசோதிக்க வேண்டும். அதற்கான முன்மாதிரிகளாய் எம் செயற்பாடுகள் இருக்க வேண்டும். இன்றைய அழிவுகள் கூட உலகஅழிவின் பகுதிகளாய் இருக்காது என்பதில் எவ்வித உத்தரவாதமுமில்லை.
சிறிதேனும் சிந்தித்து உலக நிகழ்வுகளில் உம் பார்வைகளை சுழல விடு. ஒவ்வொன்றையும் குர் ஆனின் நிழலில் படிக்க முயற்சி செய்.நாம் இவ்வாழ்க்கைக்கு சொந்தமானவர்கள் அல்ல. எம் நிரந்தர வாழ்க்கை நீண்டது. அதற் காயும் எம் தயார்படுத்தல் தொடர வேண்டும்.
தோழியே இதுவெல்லாம் யதார்த்தமானதொன்றல்ல. எம் அன்பாளனின் அருளாளனின் சத்திய வாக்குகள். மறந்திடாதே நீயும்இஸ்லாத்தின் ஒளித் தீபமேந்தி இறைபாதையில் சாதனை படைக்க ஒத்துழைப்பாய் என்ற நம்பிக்கை யோடு என் மனப்பதிவுகளின்பகிர்வுகளை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
வானங்களிலும் பூமியிலும் உள் ளவை யாவும் அவனுக்கே உரியன. அவை ஒவ்வொன்றும் அவனுக்கே கீழ்ப்படிந்து நடக்கின்றன.