சனி, 3 ஏப்ரல், 2010

சரித்திரப் பார்வையில் மூடர் தினம்! (April Fool)


சரித்திரப் பார்வையில் மூடர் தினம்! (April Fool)

1st April 2008
இறைவனின் நேரிய வழிகாட்டுதல்களும், அறிவுப்பூர்வமான எந்த வித கொள்கைளும் இல்லாமல் தம்முடைய மனோஇச்சைகளையே தங்களின் கொள்கைகளாகவும் வாழ்க்கை நெறியாகவும், கடவுளாகவும் பின்பற்றி வாழக்கூடியவர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் குறிப்பிட்ட தினங்களை முக்கியப்படுத்தி அவைகளுக்கு முக்கியத்துவம் தந்து அந்த நாட்களை கொண்டாடுவது ஆகும்.
இவ்வகையான கொண்டாட்டங்களில் காதலர் தினம், மனைவியர் தினம், அன்னையர் தினம், மூடர் தினம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வகையான தினங்களைக் கொண்டாடுவோர் அவற்றுக்காக ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் கூறுவர். இந்த சிறிய கட்டுரையில் இவர்கள் மூடர் தினம் (ஏப்ரல் ஃபூல்) என கொண்டாடும் தினத்தைப் பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டத்தைப் பார்க்கலாம்.
மூடர் தினத்தின் தோற்றம் குறித்த கருத்துக்கள்: -
மூடர் தினத்தின் தோற்றம் குறித்த பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றது. இருப்பினும் இதன் தோற்றம் குறித்த உறுதியான கருத்து என்று எதுவும் கூறுவதற்கில்லை.
இதன் தோற்றம் குறித்த கருத்துக்களில் மிகவும் பிரபலமாகக் கருதப்படும் சிலவற்றைக் காண்போம்: -
1) பண்டைய அறியாமைக் கால பழக்கம்: -
சிலரது கூற்றுப்படி, பண்டைய காலத்தில் வாழ்ந்த அறியாமைக் கால மக்கள் ஏப்ரல் 1 அல்லது மார்ச் 21 ஆம் தேதியை மையமாக வைத்து வரக்கூடிய ‘சம இரவு தினம்’ (vernal equinox) என்றழைக்கடும் (பூமியின் வடக்கு அரைக்கோளத்தில்) வசந்த காலத்தின் துவக்க தினத்தை திருவிழா தினமாக கொண்டாடி வந்தனர். இந்த தினத்தில் கேலியும் கிண்டல்களும் அடங்கிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வந்தனர்.(1)
2) புதிய வருடப்பிறப்பு அறிமுகமாதல்:-
கி.பி. 1582 ஆம் ஆண்டு கிறிஸ்தவ போப் கிரிகோரி XIII என்பவர் புதிய காலன்டரை அறிமுகப்படுத்தி ஜனவரி 1 ஆம் தேதியை புதிய ஆண்டின் துவக்க நாளாக மாற்றியபோது அதுவரை ஜூலியன் காலன்டர் முறைப்படி ஏப்ரல் ஒன்றாம் தேதியை தங்களின் வருடப்பிறப்பாக கொண்டாடி வந்தவர்கள் இந்த புதிய காலன்டரை ஏற்க மறுத்தனர். அவர்களை கேலி செய்யும் விதமாக இந்த புதிய காலன்டரை தினித்தவர்கள் ஜனவரி முதல் தேதியை வருடப்பிறப்பாக ஏற்க மறுத்தவர்களை கேலியும், கிண்டலும் செய்யும் விதத்தில் அவர்களை மூடர்களாக்குகின்ற விதத்தில் பொய்களையும் போலியான பரிசுப் பொருட்களையும் அனுப்பி வைத்து மகிழ்ந்தனர். இந்த அறிவீனமான செயல் பின்னர் படிப்படியாக ஐரோப்பியா முழுவதும் பரவலாயிற்று. (2)
3) முஸ்லிம்களிடமிருந்து ஸபெயினைக் கைப்பற்றுதல்: -
ஸபெயினை முஸ்லிம்கள் ஆட்சி செய்த போது அவர்களின் படை மிகவும் வலிமை மிக்கதாகவும் எதிரிகள் கண்டு அஞ்சக் கூடியதாகவும் அமைந்திருந்தது. அதைக் கண்டு பொறுக்காத இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களை அழித்துவிட துடித்தனர். இருப்பினும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அதற்கான காரணத்தை அவர்கள் ஆராயும் போது முஸ்லிம் படையினர் சிறந்த ஈமான் தாரிகளாகவும் இறையச்சமுடையவர்களாகவும் இருப்பதைக் கண்டனர்.
முஸ்லிம்களை வெல்ல வேண்டுமானால் அவர்களின் நம்பிக்கையைக் சிதைப்பதை விட வேறு வழியில்லை என்பதை உணர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்களுக்கு மதுபானத்தையும் சுருட்டுகளையும் இலவசமாக அனுப்பி வைத்தனர். அதைப் பயன்படுத்த துவங்கிய முஸ்லிம்கள் நாளடைவில் தங்களது ஈமானில் உறுதியழந்து பின்னர் படிப்பபடியாக தங்களின் வலிமையிலும் வலுவிழந்தனர்.
இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிறிது சிறிதாக முஸ்லிம்கள் வசம் இருந்த ஸ்பெயினின் பகுதிகளைக் கைப்பற்றலாயினர். இறுதியில் முஸ்லிம்களின் கோட்டையாக விளங்கிய கிரினாடாவில் உள்ள பகுதியை ஏப்ரல் முதல் தினத்தன்று கைப்பற்றினர். அந்த நாள் முதல் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் தேதியை மூடர்களின் தினமாக அவர்கள் கொண்டாடி வருகின்றனர். (3)
இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல் தினம்!: -
இந்த வகை மூடர் தினத்தின் தோற்றம் குறித்து கூறப்படும் கருத்துக்களில் உண்மையானது எதுவாக இருந்தாலும் முஸ்லிம்கள் இந்த தினத்தைக் கொண்டாடுவதோ அல்லது அந்த தினத்தில் ஒருவரையொருவர் கேலியும், கிண்டலும் செய்து பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதோ இஸ்லாத்தில் அனுமதிக்கபடாதவைகளாகும்.
மூடர் தினத்தை முஸ்லிம்கள் ஏன் கொண்டாடக் கூடாது?
1) ஜாஹிலிய்யாக் (அறியாமைக்) காலத்தின் அனைத்து மூடப்பழக்க வழக்கங்களையும் குழிதோண்டிப் புதைப்பதற்காக வந்தவர்கள் தான் நமது நபி (ஸல்) அவர்கள். நாம் அண்ணலாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டுமேயல்லாது அறியாமைக்கால மக்களின் பழக்கங்களாகிய பிறரைக் கேலி, கிண்டல் செய்து அவர்களை ஏமாற்றி அதன் மூலம் சந்தோசமடைவதைப் பின்பற்றக் கூடாது.
2) கிறிஸ்தவ பாதிரியாரான போப் கிரிகோரி என்பவர் துவக்கிய புதிய காலன்டரைப் பின்பற்றாதவர்களை கேலி செய்வதற்காக உருவாக்கியதாகக் கருதப்படும் இந்த தினத்தைக் கொண்டாடுபவர்கள் அவர்களின் இத்தீய செயல்களுக்குத் துணைபோவதோடு அல்லாமல் நபி (ஸல்) அவர்களின் ‘யார் அந்நிய சமூகத்தவர்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே!’ என்ற எச்சரிக்கையை மீறி செயல்பட்டவரைப் போலாவார்.
3) போதைப் பொருட்களுக்கு முஸ்லிம்களை அடிமையாக்கி அதன் மூலம் அவர்களை மூடர்களாக்கி அவர்களின் மனவலிமையை இழக்கச் செய்து அதன் மூலம் தந்திரமாக ஸ்பெயின் நாட்டை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றி அதைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்து ஒரு முஸ்லிமும் கொண்டாடுவாரானால் அவரை விட வேறு ஒரு மூடர் இருக்க முடியுமா? ஏனென்றால் இது தம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் மூடர்களாக்கப்பட்டதை தாமே கொண்டாடுவது போலாகாதா?
4) இந்த மூடர் தினத்தித்தின் தோற்றம் குறித்த மேலே குறிப்பிடப்பட்ட காரணங்கள் எதுவாக இருந்தாலும் அல்லது இவைகளல்லாத வேறு எந்தக் காரணமாக இருந்தாலும் அவைகள் அனைத்துமே முஸ்லிம்களால் தோற்றுவிக்கப்படவில்லை. மாறாக இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் இஸ்லாத்தின் எதிரிகளால் தோற்றுவிக்கப்பட்டது. எனவே தம்மை முஸ்லிம் எனக் கூறிக்கொள்ளும் எவரும் இத்தகைய தீய செயல்களிலிருந்து விலகியிருப்பதோடல்லாமல் மற்றவர்களுக்கு இதன் தீமைகளை எடுத்துக் கூற முன்வரவேண்டும்
5) இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தினங்களைக் கொண்டாடுபவர்கள் செய்யும் காரியங்களாவன: -
a. பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வது
b. பிறரை ஏமாற்றி அவர் ஏமாந்து துன்பப்படும் போது அதைப் பார்த்து ரசிப்பது
c. போலியான பரிசுப்பொருட்களை பிறருக்கு அனுப்பி அவரை கேலி செய்வது
d. ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் (தாய், தந்தை அல்லது மனைவி போன்றவர்கள்) இறந்து விட்டதாக வதந்தியைக் கிளப்பி விட்டு அவரை வேதனைப் படுத்தி அதை ரசிப்பது
e. ஒரு நாட்டின் தலைவர் இறந்து விட்டதாக அல்லது மிக மோசமான ஒரு விபத்து ஏற்பட்டு விட்தாக வதந்நியைக் கிளப்புவது
f. இது போன்ற ஏராளமான பொய்யான தகவல்களையும் கேவலத்திற்குரிய செயல்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவைகள் அனைத்துமே இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகள் மடடுமின்றி இதைச் செய்பவர்களுக்கு மிக கடுமையான எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றது.
பொய் பேசுவதன் தீமைகள்: -
1) பொய்யுரைப்பவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள்: -
அல்லாஹ் கூறுகிறான் :
16:105 நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)
2) முனாஃபிக்கின் (நயவஞ்சகனின்) அடையாளங்களில் ஒன்று பொய்யுரைப்பது: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்குர்ஆன் 9:77)
3) பொய் பேசுவது நரகத்திற்கு வழிவகுக்கும்: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும்; நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் ‘வாய்மையாளர்’ (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகி விடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), ஆதாரம்: புகாரி
4) பரிகசிப்பது மற்றும் கேலி செய்வது அறிவீனர்களின் செயல்: -
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், ‘நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்’ என்று சொன்னபோது, அவர்கள் ‘(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?’ என்று கூறினர்; (அப்பொழுது) அவர், ‘(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று கூறினார். (அல்குர்ஆன் 2:67)
5) பொய் பேசுபவனுக்குரிய தண்டனைகள்: -
சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ‘உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?’ என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, ‘நடங்கள்’ என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லது பிளந்தார் – பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், ‘அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?’ என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்’ என்றனர்.
….
நான் அவ்விருவரிடமும், ‘நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?’ என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், ‘(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.
தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.
அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்(ரலி, ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)
6) விளையாட்டுக்காகக் கூட பொய் பேசக் கூடாது: -
முஆவியா இப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசுபவனுக்கும் பொய் சொல்பவனுக்கும் கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆதாரம் : திர்மிதி
இஸ்லாத்தில் விளையாட்டாகப் பொய் பேசுவது கூட தடுக்கப்பட்டுள்ளது. அது போல பிறரை சந்தோசப்படுத்துவதற்காகவும் பொய் பேசக் கூடாது.
எனவே சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் கடுமையாக எச்சரித்திருக்கும் இத்தகைய தீய செயல்களான பொய் பேசுதல், பிறரை துன்புறுத்தி சந்தோசம் அடைதல், ஏமாற்றுதல் ஆகியவைகளையே முழு மூச்சாக செயல்படுத்தும் மிக மோசமான மூடர்களின் மூடர் தினத்தை விட்டும் முஸ்லிம்களாகிய நாhம் தவிர்ந்திருப்பதோடு அல்லாமல் பிறருக்கும் இதனுடைய தீமைகளை எடுத்துக் கூறி இதனை நமது சமூக மக்களிடமிருந்து களைவதற்கு முயற்சிக்க வேண்டும்.
அல்லாஹ் அதற்குரிய ஆற்றலையும் மனவலிமையையும் தந்தருள்வானாகவும்.
கட்டுரைக்கு உதவிய தளங்கள்: -

இஸ்லாத்தின் பார்வையில் மூடர் தினம்!



மூடர்கள் தினம் ஒழியட்டும்!


இறைவனின் நேரிய வழிகாட்டுதல்களோ அறிவுப்பூர்வமான எந்தவிதக் கொள்கையோ இல்லாமல் தங்களின் மனோ இச்சைகளையே கொள்கைகளாகவும் வாழ்க்கை நெறியாகவும் கடவுளாகவும் பின்பற்றி வாழக்கூடியவர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் குறிப்பிட்ட தினங்களை முக்கியப்படுத்தி, அவற்றுக்கு முக்கியத்துவம் தந்து, அந்த நாட்களைக் கொண்டாடுவது ஆகும்.
இவ்வகையான கொண்டாட்டங்களில் காதலர் தினம், மனைவியர் தினம், அன்னையர் தினம், மூடர் தினம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வகையான தினங்களைக் கொண்டாடுவோர் எந்த விதமான காரணங்களைச் சொன்னாலும் முஸ்லிம்களாகிய நாம் நமக்கு வழிகாட்டியாக வந்தக் குர்ஆனையும் ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு, "தின"ங்களில் வெளிப்படும் தீமைகளைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும் நேர்வழி பெறவும் முயல வேண்டும்.

பொய்யை, பரிகாசத்தை, ஏமாற்றுவதை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்த "மூடர் தினம்". மக்களில் பலர் மற்றவர்களை ஏப்ரல் ஃபூல்(முட்டாள்) ஆக்குவதற்காகப் பொய் பேசுகின்றார்கள். பிறரைப் பரிகாசப்படுத்திப் பார்க்கும் இவ்விஷயம், மக்களுக்கு மத்தியில் சாதாரணமாகத் தெரிந்தாலும் இஸ்லாமியப் பார்வையில் பெருங்குற்றம் ஆகும்.
பொய் கூறுதலையும் பரிகாசத்தையும் பற்றி இஸ்லாம்

பொய்யுரைப்பவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள்:
அல்லாஹ் கூறுகிறான்: 
நிச்சயமாக, பொய்யை இட்டுக் கட்டுபவர்களெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள்தாம். இன்னும் அவர்கள்தாம் பொய்யர்கள் - அல் குர்ஆன் 16:105.

முனாஃபிக்கின் (நயவஞ்சகனின்) அடையாளங்களில் ஒன்று பொய்யுரைப்பது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்: அவன் பேசினால் பொய்யுரைப்பான்;  அவனிடம் எதையாவது நம்பி ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான் -  அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரீ.
எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான் - அல் குர்ஆன் 9:77.
பொய் பேசுவது நரகத்திற்கு வழிவகுக்கும்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
உண்மை (பேசுவது), நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும்; நன்மையானது நிச்சயமாக சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒருவர் உண்மை பேசிக் கொண்டே  இருப்பார். இறுதியில் அவர் வாய்மையாளர் (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகி விடுவார். பொய் (கூறல்) நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழி வகுக்கும். ஒருவர் பொய் பேசிக்கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் "பெரும் பொய்யர்" எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் - அறிவிப்பவர் :  அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), ஆதாரம்: புகாரீ.
பரிகசிப்பது, கேலி செய்வது அறிவீனர்களின் செயல்:இன்னும் (இதையும் நினைவு கூருங்கள்:) மூஸா தம் சமூகத்தாரிடம், "நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்" என்று சொன்னபோது, அவர்கள்; "(மூஸாவே!) எங்களைப் பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?" என்று கேட்டனர். (அப்பொழுது) அவர், "(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறினார் - அல் குர்ஆன் 2:67.
பொய் பேசுபவனுக்கான தண்டனைகள்:
ஸமுரா இப்னு ஜுன்தப் (ரலி) அறிவித்தார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம், "உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?" என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் நாடியவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள்.) ஒரு(நாள்) அதிகாலை நேர (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
இன்றிரவு (கனவில்) இரு(வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, "நடங்கள்" என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் நாங்கள் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒரு பக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரிவரை கிழித்தார். அதேபோல், அவரது மூக்கின் ஒரு துவாரத்தையும் ஒரு கண்ணையும் பிடரிவரை பிளந்தார். பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிக்கும்போது அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காகி விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், "அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யாவர்?" என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், "செல்லுங்கள், சென்றுவிடுங்கள்" என்றனர்.

நான் அவ்விருவரிடமும் "நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட அவைதாம் என்ன?" என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், 
"(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை உங்களுக்கு) நாங்கள் தெரிவிக்கிறோம்:
தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவை பிடரிவரை கிழிக்கப்பட்டுக் கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அவன் அதிகாலையில் தன் வீட்டிலிருந்து புறப்பட்டுப் போய் ஒருவரிடம் ஒரு பொய்யைச் சொல்ல, அது 
(பல்வேறு வழிகளில்)உலகம் முழுவதும் போய்ச் சேருமே, அவன்தான்
 -  ஆதாரம்: புகாரீ ( நீண்ட ஹதீஸின் சுருக்கம்).
விளையாட்டுக்காகக்கூடப் பொய்ப் பேசக் கூடாது:
முஆவியா இப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 
"மக்களைச் சிரிக்க வைப்பதற்காக பேசுபவனுக்கும் பொய் சொல்பவனுக்கும் கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக!" என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் -  ஆதாரம்: திர்மிதீ.

இஸ்லாத்தில் விளையாட்டாகப் பொய்ப் பேசுவதுகூடத் தடுக்கப்பட்டுள்ளது. அதுபோலப் பிறரை மகிழ்விப்பதற்காகவும் பொய்ப் பேசக் கூடாது.
பொய் சாட்சி கூறல்:
ஏப்ரல் மாதத்தில் பிற மக்களை முட்டாளாக்க ஒருவன் முயற்சியில் இருக்கும்போது அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் சிலர் அந்தப் பொய்யனுக்கு ஆதரவு அளித்து, உதவி செய்யும் முகமாகப் பொய் சாட்சி பகர்கின்றனர். இதுவும் பெரும்பாவமான காரியமாகும்.

அபூபக்ரா(ரலி) கூறியதாவது: 
"பெரும்பாவங்களிலேயே மிகப்பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். "அறிவியுங்கள், அல்லாஹ்வின் தூதரே!" என்று நபித் தோழர்கள் வேண்டினர். "அல்லாஹ்விற்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும்தான்" என்று நபி(ஸல்) கூறினார்கள். சாய்ந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் பிறகு எழுந்து அமர்ந்து, "அறிந்து கொள்ளுங்கள்! பொய்ப் பேசுவதும், பொய்ச் சாட்சியமும் (பெரும் பாவம்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (பெரும் பாவம்)" என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்கள் -  நூல்: புகாரீ, முஸ்லிம்.
ஹோலி கலாச்சாரம்:
பொதுவாக மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் பிறருடைய மேலாடைகள் மீது மையைத் தெளித்து அசிங்கப்படுத்துகின்றார்கள். இதை ஏப்ரல் ஃபூலின் ஓர் அடையாளமாக நினைத்துச் செய்கின்றனர். மையைத் தெளிக்கும் இந்த நடைமுறையானது ஹோலிப் பண்டிகையின்போது நிறங்களை பரஸ்பரம் வீசிக் கொள்ளும் இந்துக்களின் ஒரு பிரிவினருடைய கலாச்சாரத்துடன் ஒத்துப் போகின்றது. எனவே, மாற்று மதக் கலாச்சாரம் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் இதைக் கைவிட வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
யார் பிற சமுதாயத்தின் மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்றானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே! - நூல்: அபூதாவூத்.
இழிவாகக் கருதுவது:
பிறரை ஏப்ரல் ஃபூல்(முட்டாள்) ஆக்கியவர்கள் ஏன் அவர்களைப் பார்த்து, கைகொட்டி ஏளனமாக சிரிக்கின்றார்கள்? ஏன் கேலி, கிண்டல் செய்து அற்ப சந்தோஷம் அடைகின்றார்கள் என்று சிந்தித்தால் ஓர் உண்மை விளங்கும். அதாவது அவர்கள் தம்மைப் புத்திசாலியாகவும் உயர்ந்தவர்களாகவும் கற்பனை செய்து கொள்கின்றார்கள். எனவே ஆணவம் தலைக்கேறிய பிறகு மற்றவர்களைத் தம்மை விட அறிவில் குறைந்தவர்கள், இழிவானவர்கள் என்று முடிவு செய்வதன் காரணத்தால்தான் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தாமல், அலட்சியமாகக் கருதி, கேவலமாக நடத்தி, இழிவுபடுத்துகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
முழுமையான முஸ்லிம் யாரென்றால், எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்று இருக்கின்றார்களோ அவர்தான் -  நூல்: புகாரீ.

எனவே, சகோதர-சகோதரிகளே!
இஸ்லாம் கடுமையாக எச்சரித்திருக்கும் இத்தகைய தீய செயல்களான பொய் பேசுதல், பிறரைத் துன்புறுத்திப் பார்த்து மகிழ்தல், ஏமாற்றுதல் ஆகியவற்றை முழுமூச்சாக செயல்படுத்தும் மிக மோசமான மூடர்களின் மூடர் தினத்தை விட்டும் முஸ்லிம்களாகிய நாம் தவிர்ந்திருப்பதோடு அல்லாமல் பிறருக்கும் இதனுடைய தீமைகளை எடுத்துக்கூறி இதனை நமது தமிழ்ச்சமூக மக்களிடமிருந்து களைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அல்லாஹ் அதற்குரிய ஆற்றலையும் மனவலிமையையும் தந்தருள்வானாக!

இந்தக் கட்டுரை, குவைத் இஸ்லாமிய வழிகாட்டு மையத்தின் தமிழ்ப் பிரிவினரால் அச்சுப் பிரதியாக வெளியிடப் பட்டதாகும். அவர்களுக்கு நமது நன்றிகள் உரித்தாகட்டும்!

‘எங்களைப் பொறுத்தமட்டில் இஸ்ரேல் என்பது உடலில் வளர்கின்ற கென்ஸர் போன்றது’


 islamonline.net இணையத்திற்கு வழங்கிய சிறப்புப் பேட்டியின் ஒரு பகுதியை இங்கு தருகின்றோம். பேட்டி கண்டவர் இவ்விணையத்தின் செய்தியாளர் ஆமிர் லதீப்.
ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டுப் படைகள் நிலைகொண்டி ருப்பதுபலஸ்தீன் எதிர்ப்புப் போராட்டத்திற்கான ஆதரவுபாரசீக வளைகுடாவின் தற்போதைய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் இஸ்ரேலின் அரசியல் நகர்வுகள் குறித்து முத்தாகி இப்பேட்டியில் தெரிவித்த கருத்துகளே இங்கு சுருக்கித் தரப்படுகின்றது.
உங்கள் நாட்டின் அணுசக்தி திட்டம் குறித்து அதிகம் விமர்சிக்கப்படுகின் றதே...
அவர்கள் (அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள்) இவ்விவகாரத் தைத் தூக்குகின்றனர். இதற்கான எவ்வித அருகதையும் அவர்களுக் குக் கிடையாது. நாம் அணுகுண்டு களைத் தயாரிப்பதற்கு முயற்சிக்க வில்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
உண்மையில் இது ஈரானுக்கு எதிரான ஒரு பிரச்சாரமே ஒழியவேறெதுவும் இல்லை. ஈரான் அணுகுண்டுகளைத் தயாரிக்கின் றதுபிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வருகின்றது என்பன போன்ற மோசமான பிரச்சாரங்களை எமக்கெதிராக முன்னெடுப்பதே இவர்களின் அரசியல் நோக்கம்.

அணுகுண்டில் எமக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது. மேற்கு லகம் ஈரான் ரகசியமாக அணு குண்டுகளைத் தயாரித்து வருவதாக எழுப்பும் கோஷங்க ளில் ஒரு வீதமேனும் உண்மை கிடையாது. உள்நாட்டில் எமக்கு ஏற்பட்டுள்ள சக்திவள தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே நாம் அமைதியான வழியில் யுரேனி யத்தை செறிவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அனைத்து வகையான சர்வதேச சட்டங்களுக் கும் அமைவாகவே இதில் நாம் ஈடுபட்டுள்ளோம்.
சக்தி வளத் தேவையுள்ள ஏனைய நாடுகளைப் போன்றே நாமும் யுரேனியத்தை செறிவாக்கி,எமக்குத் தேவையான சக்தி வளத்தை அதிகரிக்கின்றோம். ஏனைய நாடுகளைப் போன்று இவ்வாறு செய்வதற்கான அடிப் படை உரிமை எங்களுக்கு உள்ளது.
அணுகுண்டில் எமக்கு நம்பிக்கையில்லை என்று கூறுவதன் கருத்தென்ன?
தற்காலத்தில் அணுகுண்டுகள் எதனையும் செய்யப்போவதில்லை. அது முக்கியமானதுமல்ல. அணுகுண்டுகள் முக்கியமானது எனின் ஆப்கானிஸ் தான்ஈராக் யுத்தங் களை வெல்வதற்கு அமெரிக்காவி னால் முடிந்திருக்கும். லெபனான் மீதான இஸ்ரேலின் யுத்தத்தின் போதும்,பலஸ்தீனின் ஹமா ஸுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப் பின் போதும் இஸ்ரேல் வெற்றி பெற்றிருக்கும். முன்னைய சோவி யத் ஒன்றியம் பிரியாமல் இணைந் திருக்கும். எனவே அணுகுண்டுகள் இன்று எதனையும் செய்ய முடி யாது என்றே நாம் நம்புகின்றோம்.
வளைகுடாவிலுள்ள ஏனைய அறபு நாடுகள் ஈரான் அவற்றின் பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தல் என்று கருதுகின்றன. இது குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்?
இது கூட ஒரு பிரச்சாரமே. மொத்தத்தில் எமது அணுசக்தித் திட்டம் எந்த நாட்டுக்கும் எதிரா னதோ அச்சுறுத்தலோ அல்ல. குறிப்பாக பாரசீக வளைகுடாவுக்கு சமீபகமாக இருக்கின்ற எந்த நாட் டிற்கும் நாம் அச்சுறுத்தல் அல்ல. சில பாரசீக வளைகுடா நாடுகள் எமது அணு உற்பத்தி நிலையங் களிலிருந்து சில கிலோ மீற்றர் தொலைவிலேயே இருப்பதனால் ஈரானின் அணுசக்தித் திட்டம் எமக்கு அச்சுறுத்தல் என்று கூறி வருகின்றன. நாம் அவர்களுக்குச் சொல்கின்றோம்எமது யுரேனியம் செறிவாக்கப்படும் இடத்திலிருந்து இரண்டு கி.மீற்றர் தூரத்திலேயே நாங்கள் இருக்கின்றோம்.
எனவே இது குறித்து அனாவசி யமாக அச்சப்படத் தேவையில்லை. நாம் கூறுகின்ற உண்மையை இந்நாடுகள் நேரில் வந்து பார்ப் பதற்கும் நாம் இடமளிப்போம். எமக்கு அஞ்சுகின்ற வளைகுடா நாடுகள் இங்கே வந்து எமது அணு சக்தித் திட்டம் எதற்காக என்பதை பரிசீலிக்கலாம். நாம் ஏற்கனவே அவர்களுக்கு இதுபற்றிப் பல முறை தெளிவுபடுத்திவிட்டோம்.
அயல் நாடான ஆப்கானிஸ் தானில் அந்நியப் படைகள் நிலைகொண் டிருப்பது குறித்து ஈரானின் நிலைப்பாடு என்ன?
ஆப்கானில் அப்பாவிப் பொது மக்கள் மீது குண்டுகள் வீசப்படும் போதுபெனாசிர் பூட்டோ போன்ற பாகிஸ்தான் தலைவர்கள் கொலைசெய்யப்படும் போது பிராந்தியத்தில் வெளிநாட்டுப் படைகள் தங்கியிருப்பது பாதுகாப் பற்ற பதற்றமான ஒரு சூழ்நிலை யையே கடந்த எட்டு ஆண்டுகளாக உருவாக்கி யுள்ளது என்பதைத் தவிர வேறெதைத்தான் எம்மால் கூற முடியும். ஆப்கானிஸ்தானில் அந்நியப் படைகள் தோல்வி யடைந்து விட்டன என்பதே எமது உண்மையான தீர்ப்பாகும். எடுத் துக் காட்டாக ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ள அபின் உற்பத்தி யைக் குறிப்பிடலாம்.
அங்கே அந்நியப் படைகள் ஆக்கிரமிக்கும் வரை வருடாந்தம் 100 டொன் போதைப் பொருட் களும் அபினுமே உற்பத்தி செய் யப்பட்டது. ஆனால் தற்போது 8000 டொன் அபின் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆப்கானிஸ்தானிலும் பிராந்தியத் தின் ஏனைய பகுதிகளிலுமுள்ள அந்நியப் படைகளை வெளியேற் றுவதற்கு ஈரான் முழு ஆதரவளிக் கும். ஆப்கானியப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வு கிடை யாது என்று நாம் எட்டு ஆண்டு களாகக் கூறி வருகின்றோம். தற் போதுள்ள நிருவாகம் இப்பிரச்சி னைத் தீர்ப்பதற்குத் தவறிவிட்டது.
பாகிஸ்தான்ஆப்கானிஸ்தான்ஈரான் ஆகிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பின் மூலம் மாத்திரமே ஆப்கான் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். கடந்த மாதம் இம் மூன்று நாடுகளும் இஸ்லாமாபாத் திலே ஒன்றுகூடின. அதன்போது ஆப்கான் நெருக்கடியை தீர்ப்பது குறித்தும் வெளிநாட்டுப் படை களை வெளியேற்றுவது குறித்தும் ஆராயப்பட்டது.
ஆப்கானிலுள்ள வெளிநாட்டுப் படைகள் அங்கு நீடிக்கும் ஒரு அரசியல் இடைவெளியினால் பெரும் சவாலை எதிர்கொண்டுள் ளது என நாம் கருதுகின்றோம். 2011ல் இந்த அரசியல் வெற்றிடம் நிரப்பப்படும். பிராந்திய நாடுகளா லேயே அது நிரப்பப்பட வேண் டும் என நாம் கருதுகின்றோம்.
ஈரானை பிராந்தியத்தின் அச்சுறுத்தல் என்று கூறிவரும் இஸ்ரேல் குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
இஸ்ரேல் பலஸ்தீன மக்களின் புனித நிலங்களையும் பூர்வீக பூமி களையும் ஆக்கிரமித்து 6தசாப்தங் கள் கடந்து விட்டன. ஆக்கிரமிப்புபோர்க் குற்றம்அகம்பாவம் என்ப வற்றின் வரலாறாக அது மாறிவிட் டது. இஸ்ரேலை அங்கீகரித்துள்ள அறபு நாடுகள் அதனுடனான உறவு களை துண்டிக்க வேண்டும்.
1948 ஏப்ரல் 18ல் பலஸ்தீனர் களின் தைபீரியஸ் மண் மெனாச் சின் பேர்ஜினின் தலைமையிலான இர்குன் எனப்படும் சியோனிஸ தீவிரவாத இயக்கத்தினால் ஆக்கிர மிக்கப்பட்டது. அதிலிருந்த 5500 பலஸ்தீனர்கள் விரட்டியடிக்கப் பட்டனர். ஏப்ரல் 22ல் ஹைபாவை சியோனிஸ்டுகள் ஆக்கிரமித்தனர். அங்கிருந்து 70,000 பலஸ்தீனர்கள் விரட்டப்பட்டனர்.
ஏப்ரல் 25 ஜபா நகரின் மீது குண்டுகளை வீசியது அப்போதைய பலஸ்தீனின் மிகப் பெரும் நகர மாக இருந்த அதன் மீது குண்டுகள் வீசப்பட்டதால் 750,000 பலஸ்தீனர் கள் அச்சமூட்டப்பட்டு மானசீக ரீதியில் பாதிக்கப்பட்டனர்.
1948 மே 14ல் அதாவது இஸ் ரேல் பிரகடனப்படுத்தப்படுவ தற்கு முந்திய தினம் ஜாபாவை சியோனிஸ்டுகள் முற்றிலும் ஆக்கி ரமித்தனர். 1948 மே 15ல் பலஸ்தீனர் களின் இடிபாடுகள்,இறந்த உடல் கள் மீது இஸ்ரேல் பிரகடனம் செய்யப்பட்டது.
எங்களைப் பொறுத்தமட்டில் இஸ்ரேல் என்பது உடலில் வளர் கின்ற ஒரு கென்ஸர் கட்டியைப் போன்றது. ஈரான் அல்ல உண்மை யில் முழு பிராந்தியத்தின் பாது காப்புக்கும் நிரந்தர அச்சுறுத்தலாக இருப்பது இஸ்ரேல்தான் என்று கூறிவைக்க விரும்புகின்றேன்.

சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும் ஈரானின் மனித உரிமை செயற்பாட்டாளருமான கலாநிதி சிரீன் எபாதி ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி
எனது நண்பர்கள் மிகக் கடினமான காலத்தை எட்டியுள்ளனர். அவர்களின் அமைதியான எதிர்ப்பு துப்பாக்கிக் குண்டுகளாலும் சிறைகளாலும் பதில ளிக்கப்படுகின்றன. புகைப்படம் எடுப்போரும்பத்திரிகையாளரும் அரசாங்கத் தின் வன்முறையை வெளியில் கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உண்மைகளும் தகவல்களும் ஒப் படைக்கப்படுகின்றன. ஆயினும்நீதித் துறையோ குற்றவாளிகளை கண்டுபிடிக்க,கொலையாளிகளை கைதுசெய்யவன்முறைகளைக் குறைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கணிசமான அரசியல்சிவில்கலாசார செயற் பாட்டாளர்கள் குற்றங்கள் முன்வைக்கப்படாமலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர். மூடப்பட்ட கதவுகளுக் குப் பின்னால் நிகழ்ந்த விசாரணைகளுக் குப் பின்னர் அவர்களில் சிலருக்கு மரண தண்ட னையும் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஈரான் அரசினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது. 25 பேர் தமது தலைவிதியை முடித்துக் கொள்வ தற்கான நேரத்தை எதிர்பார்த்து நிற்கின்றனர்.
அரசியல் கைதிகள் மிக மோசமாக நடத்தப்படு கின்றனர். சித்தரவதைக ளினால் சிலர் இறந்துள்ளனர். கைதிகளுக்கு வழக்கப்பட வேண்டிய உரிமைக ளும் மறுக்கப்படுகின்றன. அவர்களில் நோய்க்கு ஆளான வர்கள்வயது முதிர்ந்தவர்களின் நிலமை இன்னும் கவலைக்கிடமானது.
ஈரான் பத்திரிகையாளர்களின் சிறைச்சாலையாக மாறியுள்ளது. அவர்கள் தகவல்களைப் பரப்பினார் கள் என்பதே அவர்கள் செய்த குற்றமாகும். தற்போது 63 செய்தியாளர்களும் புகைப்படப் பிடிப்பாளர்களும் ஈரானின் சிறை களில் உள்ளனர். அரசாங்கத்தை விமர் சிக்கின்ற பல்கலைக்கழக மாணவர்கள் கல்வியிலி ருந்து இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். சம உரிமை கோரும் ஈரானியப் பெண்கள் இஸ்லாமியக் குடியரசைக் கவிழ்ப்பதற்கு முயற்சிக்கி றார்கள் என குற்றம் சாட்டப்படுகின்றனர்.
கிளர்ச்சிகளைத் தூண்டுவதாக தொழிலாளர்கள்ஆசிரியர்கள் குற்றம் சாட்டப் படுகின்றனர். அவர்கள் தமது ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்று மட் டுமே கூறுகின்றனர். அவர்களில் சிலர் கைதுசெய்யப் பட்டுமுள்ளனர். முஸ்லிம் அல்லாதவர்கள் கூட இவ்வாறே நடத்தப்படுகின்றனர். இத்தகைய சூழ் நிலைகளின் கீழ் பாதுகாப்பற்ற ஈரானிய மக்கள் தொடர்ந்தும் ஜனநாயகத் திற்காகவும் மனித உரி மைக்காகவும் அமைதியான வழிமுறைகளின் மூலம் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.
நீங்கள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் பிரதிநிதி என்றவகையில் உங்களிடம் நாம் கேட்க விரும்புவதுமக்களை உங்களால் எவ்வளவு காலம் அமைதியாக இருங்கள் என்று சொல்ல முடியும். ஈரானிய மக்களின் பொறுமையும் சகிப்புத் தன்மை யும் எல்லைமீறுகின்றது. மீண்டும் மீண்டும் நடை பெறும் ஒடுக்குமுறை அரசியலும்படுகொலையும்வன்முறைகளும் ஈரானின் அமைதியையும்  பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே ஐ.நா.வின் பொதுச் சபையினால் வலியுறுத்தப்படும் தீர்மானங்களுக்கு ஏற்ப செயற்படுமாறு அரசாங்கத்தை வற்புறுத்துங்கள். கண்மூடித்தரமான கைதுநடவடிக்கைகள்மதச் சுதந்திரம்பெண்கள் உரிமை தொடர்பாக கவனமெடுங்கள்.
கௌரவத்திற்குரிய நண்பர்களேநாம் வரலாற்றுக்கு பொறுப்புள்ள வர் களாகவும் பொறுப்புக் கூறக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம்.

இந்துக்கோயில் அழிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு பாகிஸ்தான் இந்து அமைப்பு மறுப்பு


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள கிருஷ்ணன் கோயில் அழிக்கப்பட்டதாக வெளியான தகவல்களை பாகிஸ்தான் இந்து அமைப்பு மறுத்துள்ளது.
இங்குள்ள கோயில்களைச் சூழவுள்ள நிலம் தொடர்பில் பிரச்சினையிருப்பதாகத் தெரிவித்துள்ள இவ்வமைப்பு ஆனால், எந்தவொரு கோயிலும் அழிக்கப்படவில்லையெனத் தெரிவித்துள்ளது.
எம்.ஏ.ஜின்னா வீதியில் அமைந்துள்ள நாராயண சுவாமி கோயில் உள்ளிட்ட சில கோயில்களின் நிலப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இந்து சபையின் போஷகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கராச்சியிலுள்ள கிருஷ்ணன் கோயில் அழிக்கப்பட்டதாகவும் அக்கோயிலுக்குச் சொந்தமான 20 ஏக்கர் நிலம் சிந்து மாகாணத்தின் தேசியக் கட்சியினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திச் சேவையொன்று நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.
இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் அது தமக்குத் தெரிய வந்திருக்கும் எனவும் அவ்வாறு நடைபெற்றிருந்தால் தாம் அமைதியாக இருந்திருக்கப் போவதில்லையெனவும் குமார் தெரிவித்துள்ளார்.
ஆனால், 150 வருடங்கள் பழைமை வாய்ந்த நாராயணன் சுவாமி கோயிலின் ஒரு பகுதி நிலம் வாகனத் தரிப்பிடத்திற்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குமார் தெரிவிக்கிறார்.

இஸ்ரேல் போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் காஸா மீது கடுமையான தாக்குதல்


காஸா: ஹமாஸின் கட்டுப்பாட்டிலுள்ள காஸா வலயம் மீது இஸ்ரேல் போர் விமானங்களும் ஹெலிகொப்டர்களும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளன.நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 13 தடவைகள் விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஹமாஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இஸ்ரேல் விமானப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட இக்கண்மூடித்தனமான தாக்குதலில் மூன்று குழந்தைகள் காயமடைந்திருப்பதாக பாலஸ்தீன அவசரசேவைத் தலைமையதிகாரி கூறியுள்ளார்.
ஆனால், பாலஸ்தீன இராணுவத்தின் ஆயுத உற்பத்தி நிலையங்களை இலக்குவைத்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவத்தினர் பி.பி.சி.க்கு தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வருட காலப்பகுதியில் இஸ்ரேல் படையினரால் காஸா மீது மேற்கொள்ளப்பட்ட மிகமோசமான தாக்குதல் இதுவெனக் கூறப்படுகின்றது.
ஆனால், இஸ்ரேல் படையினர் காஸாவிலுள்ள இரும்புத் தொழிற்சாலைகளையும் பால் பண்ணைகளையும் படையினரின் சில பகுதிகளையும் இலக்குவைத்தே தாக்குதலை மேற்கொண்டிருப்பதாக ஹமாஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பாலஸ்தீன படையினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் கடந்த வாரம் நடைபெற்ற மோதலில் 2 இஸ்ரேல் சிப்பாய்கள் பலியான கான் யூனிஸ் நகரில் 4 விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், காஸாவினால் மேற்கொள்ளப்பட்ட ரொக்கெட் தாக்குதல்களில் கிழக்கு இஸ்ரேலில் சில பகுதிகள் பாதிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எப் 16 ரக யுத்த விமானங்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த விமானத் தாக்குதலில் அகதி முகாமிலுள்ள தொழிற்பட்டறை ஒன்றும் சேதமடைந்துள்ளது.
காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தப்படுவதும் அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் விமானத் தாக்குதல் மேற்கொள்வதும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் மோடி!


சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் மோடி!


இந்திய வரலாற்றில் முதன் முறையாக பதவியில் இருந்து கொண்டே ஒரு முதலமைச்சர் விசாரணைக் குழுவின் முன்பாக, அதுவும் இந்தியாவின் நீதிபரிபாலன அமைப்பின் உச்சம் என வர்ணிக்கப்படும் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப்புலனாய்வுக்குழுவின் முன் பாக நேர்நின்றார் ஒருவர். யார் அவர்?

இந்திய அரசியல் வரலாற்றில் பல்வேறு அவப்பெயர்களை அடுக்கடுக்காக பெற்ற குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தான் இந்த அரும்பெரும் பெருமைக்கு சொந்தக்காரர்.

1. அதிகாரிகளை கடமைகளை செய்ய வேண்டாம் என கட்டளை யிட்ட குற்றம்.
2. இனப்படுகொலைக்கு சூத்ர தாரியாக இருந்தது.
3. கொலைகாரர்களை தண்டிக் காததோடு அரவணைத்த அக்கிரமம்.

4. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி, நிதி, நிவாரணம் போன்ற வற்றிற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்காத இந்த 59 வயது முன்னணி பா.ஜ.க தலைவர், 27-3-2010 அன்று அகமதாபாத்தில் பழைய தலைமைச் செயலக கட்டிட வளாகத்திற்குள் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன்பாக நேர் நின்றார்.

காங்கிரஸின் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட 69பேர் குல்பர்க் மாளிகையில் படுகொலை செய் யப்பட்ட நிகழ்வு தொடர்பாக மோடி விசாரணைக் குழு முன்பாக நேர் நிறுத்தப்பட்டார்.

69 பேர் படுகொலை செய்யப்பட்ட குற்றச் செயல் தொடர்பாக மோடியை நோக்கி 68 கேள்விகள் சரமாரியாக வீசப்பட்டதாக ஷிமிஜி வட்டாரம் தகவல்கள் தெரிவித்தன.  

அதில் 62 கேள்விகளுக்கு மட்டும் அவர் விடையளித்ததாகவும் மொத்தம் 10 மணிநேரம் பதிலளித்த அவர் மிகவும் சோர்வடைந்ததாகவும் என்.டி. டி.வி செய்தியாளர் கூறினார்.

தங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என தான் நம்புவதாக படுகொலை செய்யப்பட்ட இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவியார் ஜாகியா ஜாஃப்ரி தெரிவித்தார்.

நீதியை முடக்கும் விதமாக இதுவரை நடந்து வந்த மோடியை விசாரணைக் குழுவின் முன்பாக நேர் நிறுத்தப்பட்ட நாள் இந்திய ஜனநாயகத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் முக்கியமான நாள் என சமூக நல ஆர்வலர் தீஸ்தா செதல் வாட் தெரிவித்தார்.

விசாரணைப்படலத்தில் சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் ஆர்.கே.ராகவன் பங்கேற்கவில்லை. விசாரணைக்குழுவின் அதிகாரியான ஏ.கே. மல்ஹோத்ரா இந்த குறுக்கு விசாரணைக் குழுவிற்கு தலைமை ஏற்றார்.

குஜராத் கலவரம் இனப்படு கொலை குறித்து சரமாரி வினாக்கள் வீசப்பட்டாலும் மோடியின் பதில்கள் குறித்த விவரங்கள் அனைத் தும் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக் கப்பட்டுள்ளது.

மோடி விசாரணைக்குழு முன்பாக நேர்நின்றதற்கு மறுநாள் (மார்ச் 28, 2010) குஜராத் சட்டப்பல்கலைக் கழகத்திற்கு பட்டமளிப்பு விழா வில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், ஜிம்பாப்வே நாட்டின் நீதிபதி அஹ்மத் மூஸா இப்ராஹீம் ஆகிய இருவருடன் இனப்படுகொலை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மோடியும் ஒரே மேடையில் சேர்ந்து கலந்து கொள்வது குறித்த சமூக நலஆர்வலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தால் நவீன நீரோ மன்னன் என குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபருடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒன்றாக விழாவில் பங்கேற்பது ஏற்புடைய ஒன்றா? என அவர்கள் வினா விடுத்துள்ளனர்.

மோடியோடு சேர்ந்து நிகழ்ச்சி களில் பங்கேற்க வேண்டாம் என இந்தியா மற்றும் ஜிம்பாப்வே நீதிபதிகளுக்கு இஹ்சான் ஜாஃப்ரியி மகள் ஜுபேர் ஜாஃப்ரி விடுத்த வேண்டுகோளும் விழலுக்கு இறைத்தநீராயிற்று.  
-அபூஸாலிஹ்

ஒடுக்கப்பட்டோருக்காக போராடிய ஷஹீத் ஆஷ்மி கொலை: பலனடைந்த காவல்துறையும்&உளவுத்துறையும்


ஒடுக்கப்பட்டோருக்காக போராடிய ஷஹீத் ஆஷ்மி கொலை: பலனடைந்த காவல்துறையும்&உளவுத்துறையும்!

தெஹல்கா  பொறுப்பாசிரியர்  அஜீத்சாகி குமுறல்!
சமீபத்தில் மும்பையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ஷஹீத் ஆஸ்மி குறித்து தனது நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் தெகல்கா புலனாய்வு இதழின் பொருப் பாசிரியர் அஜீத்சாகி.

ஷஹித் ஆஸ்மி ரஷ்யா விலோ சீனாவிலே சுட்டுவீழ்த் தப்பட்டிருந்தால் ஷஹித் ஆஸ்மி யின் படுகொலைச்செய்தி மறுநாள் காலை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளி வந்திருக்கக்கூடும். எதிரியின் எதிரி நண்பன் என்ற கொள்கை அடிப்படையில் மேற்குலக மீடியாக்கள் இந்த கொலையை கண்டு கொள்ளவே இல்லை. வழக்கறிஞர் ஆஸ்மி இந்நாட்டில் வாழ்ந்து இந்நாட்டிலேயே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்திய ஜனநாயக நாட்டில் காவல்துறையின் அரச பயங்கர வாதத்தை எதிர்ப்பது பயங் கரவாதத்திற்கு எதிரான போரை எதிர்ப்பதாக மாறியது. 

ஏனெனில் இந்தியநாடு மேற் குலக சக்திகளின் கையுறை மாட்டிய கைகளில் இருக் கிறது. இந்தியாவின் பெரும் பான்மையான மத்திய தரவர்க்கம் மேற்குலக நட்பின் பக்கமே சாய்ந்திருக்கிறது. மேற்குலக மற்றும் இந்திய மீடியாக்கள் ஆஸ்மியை பாராட்ட விரும்பவில்லை. ஆஸ்மி மும்பையில் நூற்றுக்கணக்கான ஏழைகளுக்கு குறிப்பாக முஸ்லிம் களுக்காக நீதி வென்றிட போராடிய அந்த வீரத்தியாகி பயங்கரவாத ஆதரவாளர் என பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டார்.

ரஷ்யப் பிரதமர் விளாடிமீர் புடினுக்கு எதிராக தீரத் துடன் போராடி மூன்றாண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட வீரப்பெண்மணி ரஷ்யப் பத்திரிகையாளர், மனித உரிமைப் போராளி அன்னாபொலிட் கோவ்ஸ்கியாவுக்கு இணையாக போற்றத்தக்கவர் வழக்கறிஞர் ஷஹித் ஆஸ்மி.

ரஷ்யாவிலோ, சீனாவிலோ, ஈரானிலோ அரசுக்கு எதிராக மாற்றுக் கருத்துக் கொண்ட வர்களாக இருந்தால் மேற்குலகம் அவர்களை விழுந்து விழுந்து ஆதரிக்கிறது.


ஆஸ்மியின் நீதிக்கான யுத்தம் அசாத்திய துணிச்சல்மிக்கது. அவர் அமெரிக்காவை எதிர்க்கும் குழுக்கள் என கூறப்படும் அல்காயிதா, தாலிபன் அமைப் பைச் சேர்ந்தவர்கள் என தவறாக குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்காகவும் ஆஸ்மி சட்டயுத்தத்தில் இறங்கினார். நான் நேரடியாக கேட்க விரும்புவதெல்லாம். ஷஹீதின் படுகொலையில் பயனடையந்தது இந்திய புலனாய்வுத்துறையில் இருப்பவர்கள் யார்? யார்? என்ற கேள்விக்கான பதில் தான் இதற்கான பதிலும், இந்திய உள்துறை அமைச்சகம், ரா, இன்டலிஜென்ட்ஸ் பீரோ போன்றவைகளால் கற்பிக்கப் பட்ட பயங்கரவாதம் என்ற கற்பிதத்தை உடைத்து ஒவ்வொரு வழக்கையும் ஜெயித்துக்காட்டினார்.

குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஏராளமான பேருக் காக வாதாடி அவற்றில் பெரும் பாலான வழக்குகளில் வெற்றி கண்டு மகாராஷ்ட்ரா காவல் துறையின் இழிசெயலை அம்பலப்படுத்தினார். 

2008ம் ஆண்டுவரை கைது செய் யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்கள் ஏறக் குறைய ஒரு டஜன் பேருக்காக வாதாடி னார். குஜராத்தில் பல்வேறு பயங்கர வாதக் குற்றச்சாட் டுக்கள் சுமத்தப்பட்ட பலருக்கு சட்டப்பூர்வமான ஆதரவு கொடுத் தார் ஆஸ்மி.

கடந்த ஜுலை மாதத்தில் மும்பை மத்திய சிறைச்சாலையிலிருந்து ஆஸ்மிக்கு எதிரிகள் உருவானார்கள்.

சிறைச்சாலையில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களுக்காக அடைக் கப்பட்டவர்களை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கினார்கள். கொடூரமான தாக்குதல் தொடுத்த சிறை காவலர்களுக்கு எதிரான வழக்கில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற் றியை ஈட்டினார் ஆஸ்மி.

இந்த நிகழ்வு சிறைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரி களின் வெறுப்புக்கு தீனி போடு வதாக அமைந்தது.

கடந்த டிசம்பர் 11&ம் தேதி இந் நிகழ்வைக் குறித்து அவரது அலுவலகத்தில் என்னிடம் ஆஸ்மி கூறினார். சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கிய வழக்கில் தனக்கு வெற்றி கிடைத்த அன்று எங்கள் சேரியில் இருந்து ஏராளமான அப்பாவிகளை பயங்கரவாதிகள் எனக்கூறி இழுத்துச் சென்று உதைத்தனர் என்ற அதிர்ச்சி தகவலை கூறினார் ஆஸ்மி. 

நான் அவரை ஜுலை 2008&ல் முதன்முறையாக சந்தித்தபோது, இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அப்பாவி முஸ்லிம்கள் மீது காவல் துறையினரால் புனையப்பட்ட சங்கதிகளை எனக்கு வழங்கினார். ஷஹித் ஆஸ்மி வழங்கிய தகவல்கள் வைத்து ஒரே மாதத்தில் சிமி அமைப்பினர் மீதான வழக்குகள் குறித்த புலனாய்வு தகவல்களை குறித்த முழுமையான செய்தி தெஹல்காவில் வெளியிடப்பட்டது. சிமி அமைப் பினர் எவ்வாறு பொய் யான குற்றச்சாட்டில் சிக்கவைக்கப் பட்டனர் என்ற ஆதாரபூர்வ செய்திகள் தெஹல்காவில் வெளியானது.

இந்ததேசம் மறுக்கவே முடியாத, சவால் விடவும் துணியாத நிகழ்வாக இது அமைந்தது.

மகாராஷ்ட்ரா கண்ட்ரோல் ஆஃப் ஆர்கணைஸ்ட் கிரைம்ஆக்ட் ((MCOCA) என்ற மகாராஷ்ட்ரா மாநில தீவிரவாத தடுப்புச்சட்டம் குறித்து உண்மைகளை எங்கள் தெஹல்கா இதழைச் சேர்ந்த ரானா அய்யூப் கடந்த மாதம் வெளிவந்த இதழில் அம்பலப்படுத்தினார்.

(MCOCA)  சட்டப்பிரிவுகள் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து முழுமையான செய்தி வந்தது ஷஹித் ஆஸ்மியின் வற்புறுத்தலால் தான் என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியாது.

கடந்த மாதம் ஆஸ்மியை நான் சந்தித்தேன். மூன்று முக்கிய வழக்குகளில்தான் தீவிரமாக இறங்கி சட்டயுத்தம் செய்வதாகக் குறிப்பிட்டார்.

2006-ம் ஆண்டு நிகழ்ந்த முக்கிய வழக்குகள் குறிப்பாக மும்பையில் 187 மக்கள் உயரிழக்கக் காரணமாக இருந்த ரயில்குண்டு வெடிப்பு வழக்கு 37 அப்பாவிகளை பலி கொண்ட மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்டவைகளில் தான் ஆஜராவதாகக் குறிப்பிட்டார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில்  பலர் தவறாகவும், கட்டாயப்படுத்தப் பட்டு குற்றங்களை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களின் மீதான குற்றச் சாட்டுக்கு ஒரு சிறு ஆதாரமும் இல்லை. (ஜீரோ எவிடென்ஸ்).

மகாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து ஆஸ்மி உச்சநீதிமன்றம் சென்றார். இந்த சட்டப்பிரிவு அரசியல் சாசனத்திற்கும், மக்களுக்கும் விரோதமானது என்றார். பயங்கரவாதத்திற்கு எதிராக சட்டத்தை நாடாளுமன்றம் மட்டுமே இயற்றமுடியும் என் றார். இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது.

ஆஸ்மியின் வாழ்வு வீர வாழ்வு, வீரமரணமடைந்த ஆஸ்மிக்கு 32 வயது தான். ஐந்து சகோதரர்களில் மூன்றாவதாகப் பிறந்த ஆஸ்மியின் வாழ்வு 1992&ல் மாறியது.

பாப்ரி மஸ்ஜிதை இடித்த மதவெறிக்கூட்டத்தைச் சேர்ந்த வர்கள் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுவன் ஆஸ்மியை பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களோடு கொல்ல முயன்றனர்.

ஹிந்து நண்பரான அண்டை வீட்டுக்காரர் ஷஹித்தை காப்பாற்றினார். 

ஆஸ்மிக்கு 16 வயதாக இருக்கும் போது தோளில் துப்பாக்கி தூக்கி காஷ்மீருக்கு சென்றார்.எல்லை தாண்டி செல்லவும் முயன்றிருக்கிறார். என்னவோ தெரியவில்லை. உடனடியாக திரும்பிவிட்டார் என்று அவரது அண்ணன் ஆரிஃப் என்னிடம் கூறினார்.

1994&ம் ஆஸ்மி கைது செய் யப்பட்டார். இந்தியாவின் முன்னணி அரசியல்வாதியை கொலை செய்ய முயற்சித்ததாக கைது செய்யப்பட்டார். இதற்கு ஒரே ஆதாரமாக குறிப் பிடப்பட்டது அவர் ஒருபோதும் கொடுக்காத ஒப்புக்கொள்ளாத ஒப்புதல் வாக்குமூலம் ஆஸ்மிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்தது. 

டெல்லி திஹார் ஜெயிலில் ஆஸ்மி சும்மா இருக்கவில்லை. பட்டப்படிப்பு பயின்றார். சிறையில் அடைக்கப்பட் டவர்களின் சட்ட ஆவணங்களை கவனமாக ஆய்வு செய்தார்.

2001&ம் ஆண்டு ஷஹீத் ஆஸ்மி விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்கு வந்த உடன் இதழியல் துறையிலும் அதனைத் தொடர்ந்து சட்டக்கல்வியிலும் தன்னை இணைத்துக்கொண்டார். மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு தான் துணை ஆசிரியராக பணி யாற்றிய பத்திரிகையிலிருந்து விலகி வழக்கறிஞர் மஜீத்திடம் ஜுனியராக மாதம் 2000 ரூபாய் ஊதியத்தில் பணியில் சேர்ந்தார். நான் ஏழைகளுக்காகவே பாடு படவே விரும்புகிறேன் என்றார்.

ஆஸ்மி பிரபலமானபின்னரும் கூட பெரும்பாலான கட்சிக்காரர்களிடம் கட்டணம் வாங்கியதை நான் பார்த்ததே இல்லை என்றார் அவரது அண்ணன் ஆரிஃப்.

மும்பையில், அந்த திங்கட் கிழமை (பிப்&11) நீதிபதி, நீதிமன்ற வளாகத்தில் அழுது கொண் டிருந்தார். சுற்றியிருந்த மக்கள் ஏதும் புரியாமல் அமைதியாய் இருந்தனர். 

அதே நாளில் நான் அவசர வேலையாக சென்னை வந்து இருந்தபோது, நான் கேட்ட செய்தி இடியாய் என்னைத் தாக்கியது. ஷஹீத்பாய் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியே அது.

நான்  தங்கியிருந்த தனியறை யில் உடைந்து அழுதேன். எனது மனம் பின்னோக்கி சென்றது. 1991&ம் ஆண்டு தொழிற்சங்க ஜாம்பவானும் சத்திஸ்கர் பழங்குடிமக்களுக்காக பாடு பட்ட சங்கர் குகாநியோகி சுட்டுக் கொல்லப்பட்டது என் நினைவுக்கு வந்தது. 

அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சில நாட்களுக்கு முன்பு அவரை சந்தித்திருந்தேன். அது என் மனதில் நிழலாடியது. 18 மாதங்களுக்கு முன்பு ஷஹீத்தை சந்தித்ததிலிருந்து என்வாழ்வில் வருடக்கணக்காக எனது இலக்கற்ற பத்திரிகை வாழ்வை புதுப்பித்ததைப் போன்று இருந்தது.

நீதிக்கான போராட்டத்திலும் அதிகாரவர்க்கத்தை எதிர்த்த எனது போரிலும் ஷஹீத் எனது வாழ்வை அர்த்தமுள்ளதாக் கினார். எனது கண்ணீர் பெருக் கெடுத்து ஓடி வற்றியும் விட்டது. கண்ணீருடன் சென்னை தெருக் களில் சுற்றிக்கொண்டிருந்தேன்.

மும்பையிலிருந்து அதாவுர் ரஹ்மான் என்ற முதியவர் ஒரு வர் எனக்கு போன் செய்தார். (மும்பையில் 2006&ல் நிகழ்ந்த ரயில் குண்டு வெடிப்பில் தவறுதலாக குற்றம்சாட்டப்பட்ட இருவரின் தந்தை தான் அதாவுர் ரஹ்மான். 

இந்த வழக்கிலும் ஷஹீத் தான் வாதாடினார்.)  அவர், அஜீத் சாஹிப் என்று பேச ஆரம் பிக்கும்போதே, குரல் உடைந்தது. நாங்கள் இனி என்ன செய்வோம்? என்றார்.

நான் அவரிடம் மட்டும் அல்ல ஒவ்வொரிடம் சொல்கிறேன். ஷஹித்சாகவில்லை. அவரது சீரிய சாதனைகள் மூலம் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். 

-அபூஸாலிஹ்