திங்கள், 8 பிப்ரவரி, 2010

எகிப்தின் அரசியல் சிக்கலான கட்டத்தை அடைந்துள்ளது

பிரபல அறபு ஊடகவியலாளர் அஹ்மத் மன்ஸூர்

அறபு நாடுகளில் மிகப் பெரும் நாடாக விளங்கும் எகிப்தின் சமகால அரசியல் மிகச் சிக்கலான கட்டத்தை அடைந்துள்ளது.அரசி யல் சூதாட்டக்காரர்கள் மற்றும் கொள்ளைக்காரர்களிடம் நாடு சிக்கியுள்ளது.

நாட்டின் பொருளா தார வளங்களை அந்நிய சக்திகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் மோசமான நிலையிலிருந்து படுமோசமான நிலைக்கு நாடு திரும்பி யுள்ளது என்று பிரபல அறபு இஸ்லாமிய ஊடகவியலாளர் அஹ்மத் மன்சூர்தெரிவித்துள்ளார்.

இது கொண்டலிஸா ரைஸி னால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பமா என்பது எமக்குத் தெரிய வில்லை. ஈராக்கிலும்ஆப்கானிஸ் தானிலும் யெமனிலும் சூடானி லும் ரைஸினால் உருவாக்கப்பட்ட இக்குழப்பங்களின் தொடர்ச்சியாக எகிப்தியஅரசியல் குழப்பம் தோன்றுகிறது. இது எங்கு சென்று முடியும் என்பதும் தெரியாது.

அறேபியர்களின் இரத்தத்தில் அறபு வாதம் ஒரு துளியும் இல்லை என்று நான் கருதுகின்றேன். இன்று எகிப்தியர்கள்மனஉளைச்சலுக்கு உட்பட்டுள்ளனர். எகிப்து மத்திய கிழக்கில் ஏனைய அறபு நாடுகளை பிழையாக வழிநடத்தி வருகின் றது.எகிப்தின் ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் இஸ்ரேலியப் பிரதமரை வர வேற்று அவரோடு சேர்ந்து அறிக்கைகளைவெளியிடுகின்றார். பலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரே லின் அறிக்கைகளை, ஆவணங் களை எகிப்திய அரசாங்கமும் சேர்ந்தேதயாரிக்கின்றது. இது ஏன் நடக்கின்றது. முபாரக்கின் மூத்த மகனை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்கே ஜனாதிபதிஇவ்வாறு இஸ்ரேலையும் அமெரிக்காவை யும் திருப்திப்படுத்துகின்றார்.

எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் அஹ்மத் அபூ ஜீத் ஆரம் பப் பாடசாலை யிலேனும் கற்ற வரா என்ற சந்தேகம் எழுகின்றது.ஊடகங்களுக்கு முன்னாள் ஓர் அரசியல்வாதி என்ற முறையில் எவ்வாறு உரையாற்ற வேண்டும் என்ற குறைந்தபட்சராஜதந்திரமும் அவரிடம் இல்லை. அவரது வர லாறு, அவரது தகுதி, அவரது செயற்பாடுகள் என்பவற்றை துருக்கியவெளிவிவகார அமைச்சர் அஹ்மத் தாவூதோடு ஒப்பிட்டால் அதை நன்றாக விளங்கிக் கொள்ள லாம்.

துருக்கியின் நலன்களுக்காகவே அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் செயல் படுகின்றாரே ஒழிய, அர்தூகானைதிருப்திப்படுத் தவல்ல. ஆனால் இன்று எகிப்தின் எல்லா நிறுவனங்களும் முபார க்கை திருப்திப்படுத்தவே செயல் படுகின்றன.இதன் மூலம் அதி காரத்தையும் பணத்தையும் அவர் கள் கைமா றாகப் பெறுகின்றார் கள். நான் ஒரு எகிப்தியன் என்றவகையில் அபூ ஜீத் ஊடகங்களில் பேசுகின்றபோது வெட்கப்படுகின் றேன். வெளிநாட்டமைச்சர் என்ப தற்கான எந்தத் தகுதியும்அவரிட மில்லை என அஹ்மத் மன்சூர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் பிரிட்டன் பாராளு மன்ற உறுப்பினர் ஜோர்ஜ் கலோயி நிவாரணப் பொருட்களுடன் காஸா செல்ல முபாரக்அரசினால் அனு மதி மறுக்கப்பட்டார். அதேவேளை, காஸா-எகிப்திய எல்லையில் எகிப்திய நிதியுதவியுடன் ஒரு பாதுகாப்புச்சுவர் நிர்மாணிக்கப் பட்டு வருவதாகக் கூறப்படுகின் றது. இந்நிலையிலேயே அஹ்மத் மன்சூரின் இக்கருத்துகள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக