ஷெய்க் அப்துல் மஜீத் சின்தானி
ஏகாதிபத்திய சக்திகளின் கவ னம் இப்போது யெமனை நோக் கித் திரும்பியுள்ளது. கடந்த 27ம் திகதி லண்டனில்கூடிய 21 நாடு களின் பிரதிநிதிகள் யெமனின் பாதுகாப்புக் குறித்து ஆராய்ந்ததா கத் தெரிவித்துள்ளன.
இதே தினம் யெமனின் பிரபல இஸ்லாமிய அறிஞர்கள் சன்ஆவில் நடத்திய மாநாடு ஒன்றில் லண்டன் மாநாட்டைகாரசாரமாகக் கண் டித்து அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர்.
ஷெய்க் அப்துல்லாஹ் அஹ்மர் ஷெய்க் அப்துல் மஜீத் சின்தானி ஆகியோர் இம்மாநாட்டில் உரை யாற்றினர்.அமெரிக்கப் பயணிகள் விமானத்தைத் தாக்கியழிக்கும் முயற்சி கடந்த மாதம் தோல்வி யில் முடிந்ததை அடுத்து, ஒபாமா வின் கவனம்யெமனை நோக்கித் திரும்பியுள்ளது.
அறபுத் தீபகற்பத்தில் அல் காயிதா இயக்கத்தின் மிகப் பல மான இராணுவத்தளம் யெமனில் உள்ளதாகவும் அங்கிருந்தே ஏனைய அறபுநாடுகளுக்கு அல் காயிதா போராளிகள் ஊடுருவுவ தாகவும் அமெரிக்கா தெரிவித்து வருகின்றது.
திடீரென்று யெமன் மீது அமெ ரிக்கக் கவனம் திரும்பியிருப்ப தற்கு முக்கிய காரணங்கள் பல உள்ளன. குறிப்பாக அறபு தீபகற் பத்தைச்சூழவும் அமெரிக்க மற்றும் சர்வதேசப் படைகளை நிறுத்து வதற்கு யெமனின் கேந்திரத் தளம் முக்கியமானது. யெமனை அமெ ரிக்கப்படைகள் ஆக்கிரமித்தால் சுமாராக முழு மத் திய கிழக்கும் அமெ ரிக்காவின் நேரடி இராணுவக் கட்டுப் பாட்டின் கீழ் கொ ண்டுவந்ததற்குச் சமனாகிவிடும். இதன் காரணமா கவே தற்போது யெமனில் அல் காயிதா பயங்கரவாதம் செயற்படு வதாக மேற்குஊடகங்களும் அர சியல் தலைவர்களும் கூறி வரு கின்றனர்.
அமெரிக்க விமானத்தை குண்டு வைத்துத் தகர்க்க முற் பட்டவர் யெமனியர் என்று லண்டன் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரிட்டன்பிரதமர் கோடன் பிரௌன் தெரிவித்துள் ளார். இச்சர்வதேச மாநாட்டைக் கண்டித்து சன்ஆவில் நடைபெற்ற ஒன்றுகூடலில் அந்நாட்டின்பிர தான இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து வெளியிட்டனர்.
இதேவேளை, யெமன் வெளி விவகார அமைச்சர் அபூபக்கர் அல் கிர்தி, AFP செய்திச் சேவைக்கு கருத்து வெளியிடுகையில், "எமக்குஇன்று மிக அவசியமா னவை பொருளாதார அபிவிருத்தியும் தீவிரவாதத்திற்கு எதிரான இயலுமைக ளைக் கட்டியெழுப்புவ துமே"என்று கூறினார். லண்டன் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், "நாம் வெளியுலகிலிருந்து பொருளாதார உதவிகளை வரவேற்கின்றோம்; இராணுவ உதவிகளை அல்ல" என்று கூறியுள்ளார்.
யெமன் மிக நீண்டகாலமாக வெளிநாட்டு சக்திகளால் ஆக்கிர மிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்நாட்டின் ஷீஆ பிரிவினைவாதி கள்நாட்டைத் துண்டாடும் யுத்தத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யெமன் பாரம்பரிய பழங்குடி கள் மற்றும் கோத்திர அமைப்பைக் கொண்ட நாடாகும். அங்கு அரசி யல் தலைவர்களை விட கோத்திரத்தலைவர்களுக்கான மக்கள் ஆதரவு மிகவும் அதிகம். தெற்கில் போரா டும் ஹூதிஷ் கிளர்ச்சியா ளர்கள், அதேவேளை அந்நாட்டில்ஊடுரு வியுள்ளதாகக் கூறப்படும் அல் காயிதா பிரச்சினை என்று யெமன் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது. நாட்டில் உள்ளதாகக்கூறப்படும் தீவிரவாதத்திற்கு எதிராக அரசாங் கம் ஏற்கனவே போராடி வரு கின்றது.
கடந்த காலங்களில் யெமன் தேசியப் படை களோடு இணைந்து அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில்ஈடுபட்டதாக வொஷிங்டன் போஸ்ட் எனும் அமெரிக்கப் பத்தி ரிகை தெரிவித்துள்ளது. இதேவேளை சன்ஆவில் நடைபெற்ற அறிஞர்களின் மாநாட்டில் கலந்துகொண்ட அப்துல் மஜீத் சிந்தானி, நாம் யெமனில் அமெரிக்கா தலையிடுவதை வன்மை யாக ஆட்சேபிக்கின்றோம். அமெரிக்கப் படைகள் இங்கு இறக்கப்படுமானால் நாம் ஜிஹாத் தொடர்பான பத்வாவை வழங்கத் தயாராக உள்ளோம் எனஎச்சரித்துள்ளனர்.
யெமனின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கப் படைகள் இறக்கப் பட்டால் அதற்கெதிரான கோத்திரங்களின் ஜிஹாத்பிரகடனம் நடந்தால் அந்நாட் டின் அரசியல் ஸ்திரப்பாட்டுக்கு என்ன நிகழும் என்பதே இப்போதைக்குள்ள கேள்வியாகும்.
காஸா: பொருளாதாரத் தடையை நீக்குமாறு ஒபாமாவுக்குக் கடிதம்
காஸா மீதான பொருளாதாரத் தடையையும் பட்டினிச் சாவையும் நீக்குமாறு கூறும் மனுவொன்றை அமெரிக்கக் காங்கிரஸின் 50உறுப் பினர்கள் ஜனாதிபதி ஒபாமாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக இஸ்ரேல் விதித் துள்ள இத்தடையினால்1.5 மில்லி யன் மக்கள் மனிதாபிமான நெருக் கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.
காஸாவில் தற்போது நிலவும் நெருக்கடி குறித்த அக்கறையோடு நாம் இக்கடிதத்தை எழுதுகின் றோம் என அக்கடிதம் தொடங்குகின்றது. கடந்த 26ம் திகதி ஒபாமா வுக்கு அனுப்பப்பட்ட இக்கடிதத் தின் பிரதியொன்று அறபு இஸ்லா மிய ஊடகங்களிலும் பிரசுரமாகியது.
மக்களின் அன்றாட வாழ்க் கையை இந்நெருக்கடி பாதித்து வருகிறது. 70%மானோர் வறுமைக் கோட்டின் கீழ் வந்துள்ளனர். சர்வ தேசஉதவிகளும் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. பொதுமக்களின் கீழ்க் கட்டுமான வசதிகள் சீர்குலைந்து போயுள்ளதால் அத்தியவசியசேவைகளுக்கான வாய்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.
2006ல் ஹமாஸ் அதிகாரத்திற்கு வந்தது முதல் இஸ்ரேல் இப் பொருளாதாரத் தடையை விதித்து வந்தது. 2007ல் காஸாவை ஹமாஸ்முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் பிற்பாடு பொரு ளாதாரத் தடை மேலும் இறுக்க மாக்கப்பட்டது. இஸ்ரேல் அனை த்துமனிதாபிமான உதவிகளையும் தடுத்து வருகின்றது.
சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் பலஸ்தீன சிவில் சமூகத்தை இஸ் ரேல் படிப்படியாகக் கொன்றுவருவதாகக் குறிப்பிட்டுள்ளது. காஸா மக்கள் மீதான கூட்டுத் தண் டனையை முடிவுக்குக் கொண்டு வர ராஜதந்திர அழுத்தங்களைப்பிரயோகிக்குமாறு ஒபாமாவுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள் ளது.
மீள்கட்டுமானத்திற்கான கட்டிடப் பொருட்களுக்கும் இஸ்ரேல் தடை விதித்துள் ளதால் சுமார் 80,000 மக்கள் தற்காலிக முகாம்களிலேயே வாழ்கின்றனர். குளிர் காலம் நெருங்கி வருவதால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. சுத்தமான குடி நீர்,உணவு, மருத்துவம், கழிப் பறை வசதிகள் போன்ற அடிப் படைத் தேவைகளை நிறைவேற்று வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறுஒபாமாவுக்கு காங்கி ரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். அதேவேளை இப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணப்படவேண்டும் எனவும் இவ்வுறுப்பினர்கள் ஒபாமாவைக் கோரியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக