குழந்தைகளும் பிரச்சினைகளும் 1
ஏ.பீ.எம்.இத்ரீஸ் - idrees.lk
குழந்தை வளர்ப்பில் (குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டியவர்கள் அல்ல வளரவேண்டியவர்கள்) பிரச்சினைகளைக் கையாள்வது எப்படி? என்பது நமக்கு முன்னாலுள்ள மிகப்பெரும் சவாலாகும் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகின்றோமா அல்லது உணர்ச்சி வசப்பட்டு கோபமடைந்து குழந்தையை தண்டிக்கப்போகின்றோமா என்பதுதான் நாம் தீர்மானிக்க வேண்டியதுதாகும்.
தயாராக இருங்கள்
நீங்கள் பிரச்சினையை தீர்க்கப்புறப்பட்டால் என்ன நடக்கும்? நாம் கூறப்போகும் அணுகுமுறையைப் பயன்படுத்தினால் நீங்கள் டென்ஷனிலிருந்து விடுபடுவீர்களா? மிகமுக்கியமான அணுகுமுறை என்ன தெரியுமா? பிரச்சினை மீதுதான் நீங்கள் கவனக்குவிப்பை செலுத்த வேண்டுமே தவிர குழந்தை மீதல்ல. பிரச்சினைக்குரிய குழந்தையின் பிறழ்வு நடத்தைக்கு முன்னால் நீங்கள் எப்படி நடந்து கொள்ளப்போகிறீர்கள் என்பதுதான் அது.
பிரச்சினையைத் தீர்ப்பதில் நீங்கள் கவனத்தை குவிக்கும் போதுதான் திரும்பத் திரும்ப அதே பிரச்சினை வரும்போது ஒரு நல்ல பயிற்றுவிப்பாளராக இருந்து பிரச்சினையை தீர்க்க முடியும். எப்போதும் பிரச்சியையைத்தீர்த்து குழந்தையை நடத்தை பிறழ்விலிருந்து காப்பாற்றலாம். அதற்கு இரண்டு பண்புகள் பெற்றோருக்கு அவசியமாகும். ஒன்று பொறுமை. இரண்டு சகிப்புத்தன்மை. நபிகள் இதனை பல இடங்களில் வலியுறுத்தியுள்ளார்கள். உதாரணமாக உங்கள் குழந்தை நீங்கள் வாசிக்க வைத்திருக்கும் செய்திப்பத்திரிகையைக் கிழித்தால் என்ன செய்வீர்கள்? ஆ… ஓ… கிழிக்காதே! என்று கத்திக்கொணடு குழந்தையை திட்டுவீர்களா? முதுகில் அடிப்பீர்களா? அல்லது தொடர்ந்து இந்நடவடிக்கையிலிருந்து குழந்தையை எவ்வாற தடுக்கலாம் என்பது பற்றி சிந்திப்பீர்களா? உணர்சிவசப்பட்டு ஏசினாலோ குழந்தையை அடித்தாலோ உங்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான சுமுகமான உறவு அற்றுப்பேய்விடும். அதற்குப் பின் குழந்தையுடன் உடையாடல் சாத்தியமில்லை.
அன்பை வெளிப்படுத்துங்கள்
பிறழ்வு நடத்தைகளை காணும் போது நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு விடலாம். எனவே பிரச்சினையை தீர்ப்பதில் கவனத்தை குவியுங்கள். குழந்தை மீதல்ல இநத நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துவதற்காக கோபத்தை கட்டுப்படுத்த முடியாது போனாலும் பின்வரும் காரியங்களை அவசரமாக செய்யுங்கள்
- உங்கள் குழந்தையை நேக்கி உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள். ஜ லவ் யு என்று செல்லுங்கள் அல்லது குழந்தையை அணையுங்கள் அல்லது அணைத்து முத்தமிடுங்கள்.
- எல்லாப்பிரச்சினைகளையும் தீர்க்கலாம் தீர்க்க முடியாத பிரச்சினையில்லை என்று அடிக்கடி மனதால் கூறுங்கள்
- ம்… ம்… கோபம் வெடித்து விடலாம். கோபம் வெடித்தால் அபாயகரமானது. எனவே நான் கட்டப்போகிறேனா அல்லது உடைக்கப்போகிறேனா என்று உங்கள் உள்மனதிடம் அடிக்கடி கேட்டுக் கொள்ளுங்கள்.
இவ்வாறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் முதலில் மானசீகமாக நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாரம்பரிய வழிமுறைகள்
பொதுவாகவும் குறிப்பாகக் குழந்தைகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தொன்று தொட்டு சில வழிமுறைகளை கையாண்டு வருகின்றோம். அவை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் வழி முறைகளாகும்.
1 சத்தம் போடுதல்
சத்தம்போட்டு அல்லது அதட்டிக் கத்துவதால் இரு தரப்பினருக்கிடையிலான தொடர்பாடலையும் புரிந்துணர்வையும் கெடுத்துவிடும். குழந்தை இந்த சத்தத்தில் தற்காப்புநிலை நோக்கி நகரக்கூடும். அதிகரித்த சத்தத்தில் பயப்படவும் கூடும். எதிர்பாராத காரியங்களைச்செய்து தன்னைப்பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். எனவே இந்தக் கத்தல் எந்த நல்ல விளைவையும் ஏற்படுத்தப்போவதில்லை.
சத்தம் போட்டுக்கத்துதல் குழந்தையை அணுகுவதற்கான மிகமோசமான அணுகுமுறையாகும். அடிப்பதைவிட இது மிக மோசமான விளைவுகளை எற்படுத்துகின்றன. குழந்தை வளர்ந்தபின் இந்த சத்தத்தை கேட்டாலும் குழந்தைப் பருவ உணர்ச்சிகளையே அடைவதாக உளவியலாளர்கள கூறுகின்றனர்.
டேய்… தொடாதே! டேய்… எடுக்காதே! என்ற வார்த்தைகளை உதாரணமாக குறிப்பிடலாம்.
2 கண்டித்தலும் குறைகூறலும்
அதிகரித்த கண்டித்தலும் குறைகூறலும் உள்ளங்களை வெறுக்கச் செய்யும். உறவுகளையும் தொடர்புகளையும் பிரித்துவிடும். உள்ளங்களை தூரமாக்கி விடும். இரு தரப்பினருக்குமிடையிலான நல்லென்னங்களையும் அழித்து விடும்.
3 எதுக்கெடுத்தாலும் கட்டளை பிறப்பித்தல்
எடுத்ததற்கெல்லாம் கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தால் குழந்தையும் கட்டளைக்கு ஏற்ப இயங்கும் இயந்திரமாக மாறிவிடும். ஆளுமை செயலற்று குன்றிவிடும். எந்தவித சுயவிருப்பு வெறுப்பும் அற்ற ஜடப்பொருளாக / அடிமையாக மாறிவிடும்.
4 அச்சுறுத்தல்
நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது மென்மையாகவோ, வண்மையாகவோ அச்சறுத்துவதாலும் பிரகச்சினையைத் தீர்க்க முடியாது அல்லது பிறழ்வான நடத்தையை விட்டு கழந்தையை அப்புறப்படுத் முடியாது. அச்சுறுத்துவதால் இந்நடத்தையை குழந்யை விட்டுவிடும் என்று நீங்கள் கருதினாலும் அது தற்காலிகமானது என்பதை மறந்துவிடாதீர்கள். அச்சுறுத்துவதால் குழந்தைக்கு பயம் வருகிறதே தவிர உள்ளார்ந்த துண்டுதலால் அல்ல என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.
5 பழித்தல்
ஏளனம் செய்தல், பழித்தல் குழந்தையின் தன்னம்பிக்கையை அப்புறப்படுத்தி விடுகின்றது. பிறழ்வான நடத்தையிலிருந்து விடுபடுவதற்கான ஆற்றலை இழந்து விடும். ஏளனம் செய்தல் குழந்தையின் அனைத்து ஆளுமைப்பெறுமானங்களையும் உடைத்து நொறுக்கி விடுகின்றது. குழந்தை சுற்றியிருக்கும் சூழலோடு ஒட்டி உறவாட, ஊடாட முடியாதவாறு செய்துவிடுகின்றது. இதனால் குழநதை சூழலிலிருந்து அன்னியப்பட்டுவிடும்.
6 ஏசுதல்
வசைகளைச்செல்லி குழந்தையை திட்டுவது ஏசுவது அப்பண்புகள் குழந்தையின் உள்ளத்தில் பதியச்செய்துவிடுகின்றன. கழுதை, கெட்ட ராஸ்கல், படுவா போன்ற சொற்கள் குழந்தையின் மனதை கடுமையாக பாதிக்கக்கூடும்.
7 ஒப்பிடுதல்
ஒருபோதும் உங்கள் குழந்தையை அடுத்த குழந்தையுடன் ஒப்பிடாதீர்கள். அடிப்படையில் இரு நபர்களை ஒப்பிடுவது கூடாது. அது விஞ்ஞான பூர்வமானது அல்ல. அது அறிவார்ந்ததும் அல்ல. பொதுவாக ஒப்பிடு செய்தல் இரு நடத்தைகளுக்கிடையில், இரு நிலைப்பாடுகளுக்கிடையில் வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். ஒரு குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிடும் போது அந்தக்குழந்தையின் தன்னாற்றல், தன்னம்பிக்கை அப்படியே பிடுங்கப்பட்டுவிடுகிறது. ஒப்பிடப்படும் அடுத்த குழந்தையைப்போல் தான் இல்லை என நினைத்து அது தோல்வி மனப்பான்மையில் வாழ்கிறது.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக