செவ்வாய், 21 ஜூலை, 2009

அமெரிக்கா மீண்டும் நிலவுக்கு ஆட்களை அனுப்ப வேண்டும் என்று முன்னாள் விண்வெளி வீரர்கள் கோரியுள்ளனர்

நிலவில் கால் பதித்த 40வது ஆண்டு
நிலவில் கால் பதித்த 40வது ஆண்டு
அப்பலோ திட்டத்தின் சாராம்ச உணர்வை அமெரிக்கர்கள் மீண்டும் கைப்பற்றியாக வேண்டும் என்று நிலவில் இறுதியாக நடந்த விண்வெளிவீரரான இயூஜின் சேர்னன் அழைப்புவிடுத்துள்ளார்.

1969 இல் நிலவில் மனிதன் முதலில் கால் பதித்த தினத்தை குறிக்கும் முகமான வைபவங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அமெரிக்கா மீண்டும் நிலவுக்கு ஆட்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

செவ்வாய்க்கான பயணத்திட்டத்துக்காக, நிலவில் தளங்கள் அமைக்கப்படவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

எதிர்கால விண்வெளி கண்டுபிடிப்புக்களுக்கு, நிலவுக்கான மீள் பயணங்கள் உதவும் என்று இரண்டாவதாக நிலவில் கால்பதித்த பஸ் ஆல்டரீன் கூறினார்.

அவரும், நீல் ஆம்ஸ்ட்ராங்கும் விரைவில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்கவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக