[Photo]
கடந்த மாதம் சீனாவில் ஜின்ஜி யாங் மாகாணத்தில் ஒரு தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த ஹான் சமூகத்திற்கும் லி சீன முஸ்லிம் களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு சீன முஸ்லிம்கள் (வீகர்கள்) கொல்லப்பட்டனர். இந்த கொலைகளுக்கு நீதி கேட்டு பெரிய அளவில் முஸ்லிம்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3000 முஸ்லிம் கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக அமெரிக்க வாழ் சீன முஸ்லிம்கள் கழகம் மதிப் பிட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களை காவல் துறை கலைந்து செல்ல உத்தரவிட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைய மறுத்த போது, அது கலவரமாக வெடித்துள்ளது. இந்தக் கலவரத்தில் 156 பேர் இறந்தனர் என்று ஜிங்குவா செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கொல்லப்பட்டவர்கள் மொத்தம் 184 பேர். அவர்களில் 46 பேர் ஹான் சீனர்கள், 137 பேர் உகர்கள் (முஸ்லிம் கள்) என்பது அரசுத்துறை ஊடகத்தின் கணக்கு.
கலவரத்தைத் தூண்டியவர்கள் என பல நூறு பேரை கைது செய்துள்ளதாகவும் மேலும் சந்தேகத்திற்குரிய 90 பேரை தேடி வருவதாகவும் காவல்துறை தலைவர் லியூ யோகுவாவை மேற் கோள்காட்டி ஜிங்குவா தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்திற்கு அமெரிக்கா வாழ் வீகர் கழகம் கண்டனம் தெரிவித்த தோடு, அக்கழகம் தூண்டுவதாக சீனா வெளியிடும் குற்றச்சாட்டையும் மறுத் துள்ளது. சர்வதேச சமூகம் இக்கொடும் சம்பவத்தை கண்டிக்க வேண்டும் என அக்கழகத்தின் துணைத் தலைவர் அலீம் சீடாப் வேண்டுகோள் விடுத் துள்ளார்.
வீகர்களின் சுயாட்சிக்கான போராட்டங்களை சீன அரசுகள் தொடர்ந்து ஒடுக்கி வந்திருக்கின்றன. இதனால் பலர் வெளியேறி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்தான் வெளியில் இருந்து கொண்டு பிரச்சினைகளை தூண்டுவதாக சீனா குற்றம்சாட்டி வரு கிறது. குறிப்பாக, அமெரிக்காவில் வசித்துவரும் ராபியா காதீர், தொலை பேசி மற்றும் வலைதள செய்திகள் மூலமாக தற்போதைய கலவரத்தை தூண்டினார் என்கிறது சீன கம்யூனிஸ அரசு.
ராபியா காதீர் ஜூலை 5ம் தேதி, ஜின்ஜியாங் மக்களுடன் தொலைபேசி யில் உரையாடினார் என்று குற்றம்சாட்டுகிறார் ஜின்ஜியாங் மாகாண ஆளுநர் நூர் பர்க்கி. சீன ஒடுக்குமுறை காரணமாக வெளியேறிய வீகர்கள் ராபியா காதீர் தலைமையில் போராட்டங்களைத் தூண்டுவதாகக் கூறப்படுகிறது.[Photo]
சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் முஸ் ம்கள். ஆனால் ஜின்ஜியாங்கில் பெரும்பாலான மக்கள் முஸ்லிம்கள் என்றபோதிலும், தலைநகர் உரூம்கிலில் 90 சதவீதம் பேர் சீனாவைச் சேர்ந்த ஹான் இனத்தவர்கள். தலைநகர் ஜனத்தொகை 20,30,000.
தலைநகர் உரூம்கியில் முஸ்லிம் களுக்கும் ஹான்களுக்கும் நடந்த மோத ல் 156 பேர் கொல்லப்பட்டனர். 828 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து இரண்டாவதாக காஷ்கர் நகரத்திலும் கலவரத் தீ மூண்டது. வெளிநாடு வாழ் வீகர்களின் தகவல் தொடர்புகளை துண்டிப்பதற்காக அனைத்து மின் தகவல் இணையங்களையும் சீன அரசு துண்டித்தது. எந்த ஒரு பிரச்சினைக்கும் காதீரை குற்றம்சாட்டுவது சீனாவின் வழக்கம் என்கிறார் அலீம் ஸீடாப்.
கடந்த ஆண்டு திபெத்தில் தலைநகர் லாசாவில் புத்த பிட்சுகள் அமைதியாக பேரணி நடத்தியபோதும், இதுபோல் ஒரு கலவரம் வெடித்தது. அந்த சம்பவத்திற்கு 22 பேர் பலியானார்கள். தலாய்லாமா தான் வெளியில் இருந்து தூண்டிவிடுகிறார் என்று சீனா குற்றம்சாட்டியது. அதை அவர் மறுத்தார். மத்திய ஆசியாவின் 8 நாடுகளை எல்லையாகக் கொண்ட ஜின்ஜியாங்கில் பெட்ரோல், எரிவாயு உள்ளிட்ட கனிம வளங்கள் மிகுதியாக உள்ளன. எனவே சீன பொருளாதாரத்தின் தூணாகவும் ஜின்ஜியாங் விளங்கு கிறது. தற்போது அங்கு விடுதலை விருப்பம் வீகர் மத்தியில் தலைதூக் கியுள்ளது. சமீபத்திய வருடங்களில் வலுக் கட்டாயமாக குடியமர்த் தப்பட்ட ஹான் இனத்தினர், படிப்படியாக வீகர்களை அவர்களது தாய் மண்ணில் இருந்து விரட்டியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
வீகர்களின் ஆயுதப் புரட்சி சீனாவுக்கு பெரிய தலைவலியாக இருந்து வந்தது. 2001ல் அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டபோது உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளை அமெரிக்கா பட்டியல் போட்டது. அப்போது சீனா கேட்டுக் கொண்டதன் பேரில் ஜின்ஜியாங் கில் இருந்து செயல்படும் கிழக்கு துருக்கி இஸ்லாமிய இயக்கத்தையும் தீவிரவாத இயக்கமாக அமெரிக்கா பட்டியலிட்டது.
அமெரிக்கா நடத்திவரும் பயங்கரவாதப் போருக்கு சீனாவின் ஆதரவைப் பெறவேண்டி அமெரிக்கா இதை செய்ததாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அல்காயிதாவிற்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா இறங்கியபோது, அங்கு நான்கு வீகர் முஸ்லிம்களை அமெரிக்க ராணுவம் கைது செய்தது. பின்னர் அவர்கள் குவாண்டனாமோ தீவு சிறைக்கு அனுப்பப்பட்டனர். அந்த நான்கு வீகர் முஸ்லிம்களையும் எதிரிகள் பட்டியலில் நீட்டிக்க முடியாது என்று கூறிய அமெரிக்க நீதிமன்றம், நான்கு பேரையும் விடுவித்தது. இவர்களை சீனா தீவிரவாதிகள் என்று மீண்டும் கூறி வருகிறது. இவர்கள் கடந்தமாதம் குவாண் டனாமோவில் இருந்து பெர்முடாவுக்கு அனுப்பப்பட்டனர்.
ஜின்ஜியாங்கில் வீகர் முஸ்லிம்கள் நசுக்கப்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைக் குழு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அடிப்படை ஆதாரமின்றி சீனாவின் வேண்டு கோளை ஏற்று எந்த இயக்கத்தையும் தடை செய்யக் கூடாது என்றும் அறிவுறுத் தியிருக்கிறது. திபெத்தைப் போன்று ஜின்ஜியாங் முஸ் ம்களின் சமய வழிபாட்டு உரிமையும் கடின ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்கிறார் மனித உரிமை கண்காணிப்பகத்தின் இயக்குனர் பிராட் ஆடம்ஸ்.
வீகர்களை பலவீனப்படுத்த சீன அரசு சொந்த செலவில் ஹான்களை அதிகப் படியாக குடியேற்றி வருகிறது. ஜின்ஜியாங் மாகாணத்தில் அமைதியான வழியில் இஸ்லாமிய நெறிகளை பரப்பி வருவோரையும் தீவிரவாதிகள் என சீனா கூறுகிறது. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிந்தைய உலக சூழலை சீனா தோதாகப் பயன்படுத்திக் கொள்கிறது.
ஜின்ஜியாங் முஸ்லிம்கள் வன்முறை, தண்டம், சிறை மற்றும் சித்திரவதைக்கு மத்தி யில்தான் இறைவணக்கத்தில் ஈடுபடுகின்ற னர். திபெத்திலும் இதே நிலைதான் கிழக்குப் பகுதிகளான திபெத்தையும் ஜின்ஜியாங்கையும் சீன பகுதியோடு இணைத்துக் கட்ட அதிகப்படியான பொருட்செலவில் ஹானர்களை இரு பகுதிக்குமாக அனுப்பி வைக்கிறது அரசு.
முஸ்லிம் மார்க்க அறிஞர்களை கைது செய்கிறது. குர்ஆனின் வசனங்களையும் தணிக்கை செய்கிறது என்றெல்லாம் மனித உரிமை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த அறிக்கை 114 பக்கங்களைக் கொண்டுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று உரூம்கி நகரத்தின் பள்ளிவாசல்கள் மூடப்பட்டன. அன்றைய ஜும்மா தொழுகை தடுக்கப் பட்டது. முஸ் ம்கள் தங்கள் வீடுகளில் தொழுதுகொள்ளும்படி அறிவுறுத்தப் பட்டனர். உரூம்கியில் 20 லட்சம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். உரூம்கியின் பெரிய கடை வீதி அருகே உள்ள பள்ளிவாச ல் வாரம்தோறும் 3000 முதல் 5000 பேர் தொழுகைக்கு வருவது வழக்கம்.
ஜிலி8 மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த சீன அதிபர் ஹீ ஜிண்டாவோ தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். தொலைக் காட்சியில் உரையாற்றிய அதிபர், பிரி வினைவாதிகள்தான் இந்தக் கலவரத் தைத் தூண்டினர் என்றார்.
தற்போது கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தற்கா க மானதுதான். காரணம் இதற்கு முன்னரும் இதுபோன்ற வீகர் எழுச்சி ஏற்பட்டு பின்னர் அடக்கப்பட்டிருக்கிறது. சோசலிஸம் பற்றி அதிகம் பேசும் கம்யூனிஸ்டு கள் மனித உரிமைகளுக்கும் சுயாட்சிக்கும் எதிரான அடக்குமுறைகளைக் கையாள் வது வியப்பான விஷயமல்ல. கொள்கை கோட்பாடு எதுவாக இருந்தாலும் அதிகார வர்க்கத்திற்கு ஒரு ஆபத்து ஏற்படும் என்றால் அடக்குமுறை ஏவப்படும். மேற்கு வங்காளத்திலும் இதுதான் நடக்கிறது. கிழக்கு சீனாவிலும் இதுதான் நடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக