செவ்வாய், 21 ஜூலை, 2009

இரான் அதிபர் தேர்தல் குறித்து மக்கள் வாக்கெடுப்பு கோரி மதகுருமார் அழுத்தம்


இரானில் கடந்த மாதம் நடைபெற்ற சர்ச்சைகுரிய அதிபர் தேர்தல் தொடர்பாக தேசிய அளவில் மக்களிடையே கருத்தை அறியும் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டின் அரசு மீது தொடர்ந்து அழுத்தங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இரானின் முன்னாள் அதிபரான மொஹமது கட்டமி உட்பட அங்கு சீர்திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் மதகுருமார்களே இவ்வாறான அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர்.

நாட்டின் அதிபராக அஹமதி நிஜாட் அவர்கள் மீண்டும் அதிபராக தேர்தெடுக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் மக்கள் அங்கு தேர்தல் நடைமுறைகளில் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்று இந்த சீர்திருத்த மதகுருமார்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் நாட்டின் அதியுயர் மதத்தலைவரான அயோத்துல்லா அலிகமனேய் அவர்கள், இந்த மேட்டுக்குடி மக்கள் என்ன பேசுகிறோம், அல்லது என்ன பேசவில்லை என்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இரானின் எதிரிகள் விரிக்கும் வலையில் வீழ்ந்து விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக