மட்டக்களப்பு ஓட்டமாவடியில் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரது வீட்டின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாதோர் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி மீராவோடை ஹாஜியார் வீதியில் அமைந்துள்ள எம்.டி பதுர்டீன் என்னும் வாழைச்சேனைப் பிரதேச சபை உறுப்பினரது வீட்டின் மீதே இக் கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி தாக்குதலால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சிகிச்சைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் முன்பக்க யன்னல் கண்ணாடிகள்கள் உடைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக