மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் பகுதியில் சட்டவிரோதமாகச் செயற்பட்டுவந்த ஆயுதக்குழுக்களைச் சேர்ந்தவர்களே இன்று செவ்வாய்க்கிழமை தமது ஆயுதங்களை ஏறாவூரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வைத்து தமது மதத் தலைவர்களிடம் கையளித்தனர். பின்னர் இந்த ஆயுதங்கள் பிரதிக் காவல்துறை மா அதிபரிடம் பள்ளிவாசல் உலாமாக்களினால் ஒப்படைக்கப்பட்டது. ஏழு துப்பாக்கிகள், கைக்குண்டுகள் உட்பட சில ஆயுதங்களே இன்றைய நாள் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் ஆயுதக் கையளிப்புக்காக ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசத்தின் போது எதிர்பார்க்கப்பட்டளவு ஆயுதங்கள் கையளிக்கப்படாததையடுத்தே அதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டது. கிழக்குப் பகுதியில் 18 முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் செயற்பட்டுவருவதாகவும், இவர்களிடம் 400-க்கும் அதிகமான ஆயுதங்கள் இருப்பதாகவும் காவல்துறையின் புலனாய்வு வட்டாரங்கள் அறிவித்திருந்தன. இருந்த போதிலும் மிகவும் குறைந்தளவு ஆயுதங்களே இதுவரையில் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக