செவ்வாய், 21 ஜூலை, 2009

கிறிஸ்தவ, இஸ்லாமிய மதக் குழுக்களை உடனடியாக அரசு தடைசெய்ய வேண்டும்


ஹெல உறுமய பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்

ஒழுங்குபடுத்தப்பட்ட ஆயுதக் குழுக்களாக முஸ்லிம் இளைஞர்கள் இயங் குகின்றனர் என்று சில ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் தவறா னவை என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல் லாஹ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட சிலர் தற்பாதுகாப்புக்காக ஆயுதங்களை வைத்திருந்தனர். அவ்வா றான ஆயுதங்களை ஒப்படைக்குமாறு பாதுகாப்புப் படையினர் வேண்டிக் கொண்டனர். இப்போது புலிகளது அச்சுறுத்தல் இல்லை. ஆத லால், அவர்கள் தம்மிடமிருந்த ஆயுதங்களை படையினரிடம் ஒப்படைத்தனர். அரச படையி னர் போதிய பாதுகாப்பை எமக்குத் தருவர் என நாம் நம்பு கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் பாதுகாக்கும் உத்தரவாதத்தை பாது காப்பு அமைச்சு வழங்கியுள்ளது. கிழக்கில் மட்டுமல்ல, நாட்டின் எந்தப் பிரதே சத்திலும் சட்டவிரோத ஆயுதங்களை யாரும் வைத்திருக்க முடியாது என அமைச்சு வலியுறுத்தியுள்ளது. இந்த சூழலில் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களிலும் இவ்வாறான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன என அவர் குறிப்பிட்டார்.

கிழக்கில் தற்பாதுகாப்புக்காக அரச படையினரின் ஆதரவோடு அமைக்கப் பட்ட ஊர்காவல்படை அமைப்பையே இப்போது முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் என்று இவர்கள் திரித்துக் கூறுகின்றனர் என ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக